இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் மனோஜ் பாரதிராஜா

Published By: Ponmalar

25 Mar, 2023 | 01:01 PM
image

‘தாஜ்மஹால்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமான மனோஜ் பாரதிராஜா, 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா கதையின் நாயகனாக நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்குகிறார்.

'வெண்ணிலா கபடி குழு' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தற்போது இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார் சுசீந்திரன்.

இவரது தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் பாரதிராஜா முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். இவருடன் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கவிருக்கும் திரைப்படத்தை மனோஜ் பாரதிராஜா இயக்குகிறார். இதன் மூலம் மனோஜ் பாரதிராஜா தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

படத்திற்கான இசையினை ‘இசை அசுரன்’ஜீ. வி. பிரகாஷ்குமார் வழங்கவுள்ளார். இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கும் என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

நடிகராக எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்ய தவறிய மனோஜ் பாரதிராஜா, இயக்குநராக வெற்றி பெற்று, தனது தந்தையின் கனவை நனவாக்குவார் என எதிர்பார்ப்போம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூஜையுடன் தொடங்கிய பிரபு தேவாவின் 'பேட்ட...

2023-06-02 10:57:34
news-image

சமுத்திரகனி நடிக்கும் 'விமானம்' பட முன்னோட்டம்...

2023-06-02 10:43:53
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படப்பிடிப்பு...

2023-06-02 10:44:21
news-image

உதயநிதி ஸ்டாலினின் 'மாமன்னன்' ஒடியோ வெளியீடு

2023-06-02 10:43:16
news-image

எஸ்.ஜே. சூர்யாவின் 'பொம்மை' திரைப்படத்தின் வெளியீட்டு...

2023-06-02 10:46:49
news-image

ரேகா நடிக்கும் 'மிரியம்மா' பட தொடக்க...

2023-06-02 09:55:25
news-image

'எறும்பு' திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு

2023-06-01 17:02:25
news-image

'டக்கர்' அதிவேகமான திரைக்கதை - நடிகர்...

2023-06-01 14:05:31
news-image

இளைய தலைமுறையினரைக் கவருமா சித்தார்த்தின் ‘டக்கர்’..?

2023-06-01 12:03:24
news-image

சுனைனா நடிக்கும் 'ரெஜினா' பட டீசர்...

2023-06-01 11:31:49
news-image

ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட ‘போர் தொழில்’படத்தின் முன்னோட்டம்

2023-05-31 14:32:35
news-image

நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கும் 'பெல்'

2023-05-31 10:47:00