logo

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் தென்னாபிரிக்க இலங்கை கூட்டுசெயற்குழு – அமைச்சர் தகவல்

Published By: Rajeeban

25 Mar, 2023 | 11:47 AM
image

இனப்பிரச்சினை தீர்விற்கான உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காக இலங்கை தென்னாபிரிக்காவுடன் இணைந்து கூட்டு செயற்குழுவொன்றை ஏற்படுத்தவுள்ளது.

அமைச்சர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சரும் நீதியமைச்சரும் தென்னாபிரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தருணத்திலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

நிறவெறிக்கு பின்னரான தங்களின் அனுபவங்களை அடிப்படையாக வைத்து உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்கு தென்னாபிரி;க்க அதிகாரிகள் இணங்கியுள்ளனர் என அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவின் அனுபவங்களை அடிப்படையாக வைத்து இலங்கையில் கூட்டு செயற்குழு அமைக்கப்படும் தென்னாபிரிக்க அதிகாரிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள இணங்கியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படும் இலங்கையின் அரசமைப்பிற்கு ஏற்ற வகையில் பொறிமுறை உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒளி மற்றும் ஒலி பரப்பு சட்டமூலம்...

2023-06-10 20:20:30
news-image

யாழில் தனியார் கல்வி நிலையங்கள் சங்கமொன்றை...

2023-06-10 20:17:48
news-image

யாழில் 'சுயமரியாதை நடைபவனி' முன்னெடுப்பு

2023-06-10 20:16:58
news-image

வீடொன்றினுள் புகுந்து நகை, பணம், கையடக்கத்தொலைபேசியை...

2023-06-10 20:15:20
news-image

மாங்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் காட்டு...

2023-06-10 19:56:20
news-image

பிள்ளைகளின் போதைப்பொருள் பாவனைக்கு பெற்றோரின் கவனயீனமும்...

2023-06-10 19:53:28
news-image

மொபைல் போன் பாவனையாளர்களுக்கு ஒரு இனிப்பான...

2023-06-10 17:45:01
news-image

பதுரலிய, மத்துகம வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

2023-06-10 17:04:49
news-image

சமூக அரசியல் செயற்பாட்டாளர் பிரசாத்வெலிக்கும்புரவை சிஐடியினர்...

2023-06-10 16:51:18
news-image

ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய...

2023-06-10 15:22:50
news-image

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள்...

2023-06-10 15:02:42
news-image

வெளியக சுயநிர்ணயம் கோரும் நிலை ஏற்படும்...

2023-06-10 16:14:27