கட்டார் தலைநகர் தோஹாவில் புதன்கிழமை (22) கட்டிடம் இடிந்து விழுந்ததில் இலங்கை பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டாரின் உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, தோஹாவின் பின் டர்ஹாம் சுற்றுப்புறத்தில் நான்கு மாடி கட்டிடம் இருந்துள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் ஒன்பது பேர் உயிர்தப்பியுள்ளதோடு, உயிரிழந்த நபர் கட்டிடம் இடிந்து விழுந்தபோது கட்டிடத்திற்குள் இருந்துள்ளார்.
உயிரிழந்த இலங்கையர் 56 வயதுடையவர் எனவும் அவரது மகனால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 60 வயதுடைய நபர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் கட்டாரில் பணிபுரியும் அவரது மகனினால் கட்டாரில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM