logo

மின்சார சபையின் பாவம் நாட்டு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது - தயாசிறி ஜயசேகர

Published By: Digital Desk 3

25 Mar, 2023 | 08:58 AM
image

(எம்.ஆர் எம்.வசீம்.இராஜதுரை ஹஷான்)

இலங்கை மின்சார சபையின் பாவம் ஒட்டுமொத்த மக்களின் மீது சுமத்தப்பட்டுள்ளது.மின்சார சட்டத்திற்கு புறம்பாக நியாயமற்ற வகையில் மின்கட்டணத்தை அதிகரிக்கும் அறிவுறுத்தல் நிபந்தனையாக விதிக்கப்பட்டதா, இல்லையா என்பதை சர்வதேச நாணய நிதியம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர்  கடனை தொடர்ந்து இலங்கையின் அரசமுறை கடன் 61 பில்லியன் டொலராக உயர்வடையும். ஆகவே நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றதையிட்டு மகிழ்ச்சியடைவதும்,பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதும் அர்த்தமற்றது.

 சர்வதே ச  நாணய நிதியத்தின் நிபந்தகைளை செயற்படுத்தும் போது சமூக கட்டமைப்பில் என்றும் அமைதி நிலவாது,போராட்டம்,முரண்பாடுகள்,ஏற்றத்தாழ்வு ஆகியன மாத்திரம் மிகுதியாகும்.தேசிய வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கு துறைசார் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புக்களை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.

இலங்கை மின்சார சபையின் பாவம் ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.மின்சார சட்டத்தின் 30ஆவது பிரிவின் (பி) உறுப்புரையில் ' மின்பாவனையாளர்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அல்லது தாங்கிக் கொள்ள கூடிய நியாயமான மின்கட்டணம் அறவிடப்பட வேண்டும் 'என குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் தற்போது ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான கட்டணமா அறவிடப்படுகிறது.

மின்கட்டணம் முறையற்ற வகையில் அதிகரிக்கப்பட்டது.இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில், ஆணைக்குழுவுக்குள் முரண்பாடுகளை தோற்றுவித்து,தமக்கு சார்பானவர்களை ஆணைக்குழு உறுப்பினர்களாக நியமித்து, அரசாங்கம் முறையற்ற வகையில் சட்டத்திற்கு முரணான வகையில் மின்கட்டணத்தை அதிகரித்து.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டது என அரசாங்கம் குறிப்பிடுகிறது. நாட்டின் துறைசார் சட்டத்துக்கு எதிராக ஒரு விடயத்தை செயற்படுத்த  அறிவுறுத்தல் நிபந்தனையாக விதிக்கப்பட்டதா என்பதை சர்வதேச  நாணய நிதியம் அறிவிக்க வேண்டும்.

பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்,ஆனால் அந்த திட்டங்கள் வெளிப்படைத் தன்டையுடன் காணப்பட வேண்டும்.

கடன் மறுசீரமைப்பு என குறிப்பிட்டுக் கொண்டு அரச நிறுவனங்களை விற்கும் தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.நாட்டில் விற்பதற்கு மிகுதியாக அரச வளங்கள் ஏதும் இல்லாத காரணத்தினால் துறைசார் நிறுவனங்களில் அரசுக்கு சொந்தமான பங்குகளை விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனம் கடந்த ஆண்டு (2022) வரி செலுத்தலுடன் 108 மில்லியன் ரூபா இலாபமடைந்துள்ளது.டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் போது அதனுடன் தொடர்புடைய மொபிடெல் தரவு கட்டமைப்பையும் வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்க நேரிடும்.

நாட்டில் விற்பதற்கு தேசிய வளங்கள் ஏதும் இல்லாத நிலையில் நாட்டின் இறையாண்மையுடன் தொடர்புடைய முக்கிய அம்சங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.ஆகவே இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.தொழில்சார் உரிமைக்காக போராடும் மக்களை பயங்கரவாதிகள் என சித்தரிப்பதால் பிரச்சினைகள் தீவிரமடையுமே தவிர,ஒருபோதும் தீர்வு காண முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒளி மற்றும் ஒலி பரப்பு சட்டமூலம்...

2023-06-10 20:20:30
news-image

யாழில் தனியார் கல்வி நிலையங்கள் சங்கமொன்றை...

2023-06-10 20:17:48
news-image

யாழில் 'சுயமரியாதை நடைபவனி' முன்னெடுப்பு

2023-06-10 20:16:58
news-image

வீடொன்றினுள் புகுந்து நகை, பணம், கையடக்கத்தொலைபேசியை...

2023-06-10 20:15:20
news-image

மாங்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் காட்டு...

2023-06-10 19:56:20
news-image

பிள்ளைகளின் போதைப்பொருள் பாவனைக்கு பெற்றோரின் கவனயீனமும்...

2023-06-10 19:53:28
news-image

மொபைல் போன் பாவனையாளர்களுக்கு ஒரு இனிப்பான...

2023-06-10 17:45:01
news-image

பதுரலிய, மத்துகம வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

2023-06-10 17:04:49
news-image

சமூக அரசியல் செயற்பாட்டாளர் பிரசாத்வெலிக்கும்புரவை சிஐடியினர்...

2023-06-10 16:51:18
news-image

ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய...

2023-06-10 15:22:50
news-image

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள்...

2023-06-10 15:02:42
news-image

வெளியக சுயநிர்ணயம் கோரும் நிலை ஏற்படும்...

2023-06-10 16:14:27