சென் தோமஸ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டிய றோயல் அணிக்கான மஸ்டேங்ஸ் கிண்ணத்தை அணித் தலைவர் தசிஸ் மஞ்சநாயக்கவிடம் றோயல் கல்லூரி அதிபர் ஆர்.எம்.எம். ரத்நாயக்க வழங்குவதையும் இடமிருந்து வலமாக அர்ஜுன வைத்யசேகர (இணை செயலாளர், சென் தோமஸ்), குமுது வர்ணகுலசூரிய (இணைத் தலைவர், சென் தோமஸ்), மதுஷான் ரவிச்சந்திரகுமார் (போட்டி தீர்ப்பாளர், சென் தோமஸ்), வண. மார்க் பிலிமொரியா (முதல்வர், சென் தோமஸ்), சிரன்த டி சொய்ஸா (உதவித் தலைவர் / தலைமை அதிகாரி, ஹோம் அண்ட் பிக்ஸ்ட் ப்றோட்ப்ராண்ட் பிஸ்னஸ், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி), எஸ். சுபங்கன் (தலைமை நிதியியல் அதிகாரி, டய்யான் ஸ்டீல் - படத்தில் மறைந்துள்ளார்), பிரதம அதிதி தினேஷ் தர்மரட்ன (1994 றோயல் அணித் தலைவர்), தெவின் பத்மநாதன் (போட்டி தீர்ப்பாளர், றோயல்), ரெஹான் குணசேகர (இணைத் தலைவர், றோயல்), ரமேஷ் அபேவிக்ரம (இணை செயலாளர், றோயல்) ஆகியோரையும் படத்தில் காணலாம்.
(நெவில் அன்தனி)
சென் தோமஸ் அணிக்கு எதிராக எஸ்.எஸ்.சி. மைதானத்தில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற 46ஆவது வருடாந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் றோயல் அணி வெற்றிபெற்று மஸ்டேங்ஸ் கிண்ணத்தை 23ஆவது தடைவையாக சுவீகரித்தது.
புலன் வீரதுங்க, சந்தேஷ் ராமநாயக்க ஆகியோரின் கட்டுப்பாடான பந்துவீச்சுகள், அணித் தலைவர் தசிஸ் மஞ்சநாயக்கவின் சகலதுறை ஆட்டம், ரெஹான் பீரிஸ், உவிந்து வீரசேகர ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் என்பன றோயல் அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றின.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த சென் தோமஸ் அணி 48.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.
சென் தோமஸ் அணியின் 3ஆவது விக்கெட் 9ஆவது ஓவரில் வீழ்த்தப்பட்டபோது அதன் மொத்த எண்ணிக்கை 26 ஓட்டங்களாக இருந்தது.
எனினும் மிகவும் பொறுமையாகத் துடுப்பெடுத்தாடிய ஆரம்ப வீரர் சேனாதி புலேன்குலம 3 இணைப்பாட்டங்களில் பங்காற்றி அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டார்.
மஹித் பெரேராவுடன் 4ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களையும் அதனைத் தொடர்ந்து 5ஆவது விக்கெட்டில் ஆகாஷ் பெர்னாண்டோவுடன் மேலும் 38 ஓட்டங்களையும் பின்னர் 7ஆவது விக்கெட்டில் நாதன் கல்தேராவுடன் மேலும் 31 ஓட்டங்களையும் புலேன்குலம பகிர்ந்தார்.
சேனாதி புலேன்குலம 134 பந்துகளை எதிர்கொண்டு 66 ஓட்டங்களைப் பெற்றார்.
மஹித் பெரேரா (28), ஆகாஷ் பெர்னாண்டோ (12), நாதன் கல்தேரா (12) ஆகிய மூவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற மற்றைய 3 துடுப்பாட்ட வீரர்களாவர்.
றோயல் பந்துவீச்சில் புலன் வீரதுங்க 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தசிஸ் மஞ்சநாயக்க 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சந்தேஷ் ராமநாயக்க 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
166 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் 37 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 166 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
றோயல் அணியின் ஆரம்பமும் சிறப்பாக அமையவில்லை. அதன் முதல் 2 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டபோது மொத்த எண்ணிக்கை 29 ஓட்டங்களாக இருந்தது.
எனினும், மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ரெஹான் பீரிஸ் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட ஆட்டம் இழக்காமல் 69 ஓட்டங்களையும் உவிந்து வீரசேகர 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 50 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 107 ஓட்டங்கள் றோயல் அணிக்கு தெம்பூட்டுவதாக அமைந்தது.
நீலவர்ணங்களின் சமரில் ஹீரோவான அணித் தலைவர் தசிஸ் மஞ்சநாயக்க 26 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இப் போட்டிக்கு டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் பிரதான அனுசரணை வழங்கியதுடன் டய்யான் ஸ்டீல்ஸ் இணை அனுசரணை வழங்கியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM