ஜேர்மனியிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் விரிவுரையாளராக செயற்படவுள்ளமையால் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சிறி ஹெட்டிகே தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். 

தனது இராஜினாமா கடிதத்தை அரசியலமைப்பு சபைக்கு சமர்பித்துள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார். 

பல்கலைக்கழக விரிவுரையாளர் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் ஆணைக்கழுவின் உறுப்பினர்களுள் ஒருவராக தொடர்ந்தும் செயற்படப் போவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.