Change Maker க்கான 'ஸ்வாபிமானி - 2021' விருதை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் வென்றது

Published By: Nanthini

24 Mar, 2023 | 05:00 PM
image

ஈ-ஸ்வாபிமானி, டிஜிட்டல் மற்றும் சமூக தாக்கத்தை மையமாகக் கொண்ட விருதுகள் 2021இல் 'அரச மற்றும் பிரஜைகள் ஈடுபாடு' என்ற பிரிவில், Enfection Pvt LTDஆல் உருவாக்கப்பட்ட Change Maker டிஜிட்டல் தளத்துக்கான சிறப்பு விருதினை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) பெற்றுள்ளது. 

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி திரு. குமார் லோபேஸ் மற்றும் Enfection நிறுவனத்தின் பிரதான செயற்பாட்டு அதிகாரி திரு. லஹிரு ஹல்கேவெல ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினரும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சருமான கனக ஹேரத்திடமிருந்து இவ்விருதினை பெற்றுக்கொண்டனர். 

இவ்விருது வழங்கும் நிகழ்வு கடந்த மார்ச் 7ஆம் திகதி இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. 

(SLPIஇன் பிரதான நிறைவேற்று அதிகாரி திரு. குமார் லோபேஸ் (இடமிருந்து 2ஆவது) மற்றும் Enfection நிறுவனத்தின் பிரதான செயற்பாட்டு அதிகாரி திரு. லஹிரு ஹல்கேவெல (வலமிருந்து 2ஆவது) ஆகியோர் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்திடமிருந்து (வலமிருந்து 3வது) ஸ்வாபிமானி விருது வழங்கும் விழாவில் அரச மற்றும் பிரஜைகள் ஈடுபாடு என்ற பிரிவில் விருதினை பெற்றுக் கொள்கின்றனர். ICTAவின் தலைவர் பேராசிரியர் மலிக் ரணசிங்க (இடமிருந்து 3வது), பிரதான நிறைவேற்று அதிகாரி (வலது) திரு. மகேஷ் பெரேரா மற்றும் இப்போட்டியின் நடுவர் (இடது) திரு. இந்திக டி சொய்சா ஆகியோரும் இப்படத்தில் காணப்படுகின்றனர்.)

நல்லாட்சி மற்றும் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிப்பதில் இலங்கைக்கான மிக முக்கியமான சட்டங்களில் ஒன்றான 'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை' (RTI) ஊக்குவிக்கும் செயலுறு முகவராக SLPI செயற்படுகிறது.

சேஞ்ச்மேக்கர் பொது மக்களின் நன்மைக்காக RTIஇனை ஊக்குவிப்பதற்கான ஒரு தளமாக உருவாக்கப்பட்டது. இது ஊடகவியலாளர்கள் மற்றும் பிரஜைகளுக்கு RTI பயனர்களின் வெற்றிக் கதைகளையும் அனுபவங்களையும் தொகுத்து வழங்குகிறது. இது ஊடகவியலாளர்களுக்கும் பிரஜைகளுக்கும் RTI கோரிக்கைகள், முறையீடுகள் மற்றும் செயல்முறையை பின்பற்றுவதற்காக அவற்றை டிஜிட்டல் முறையில் உருவாக்க உதவுகிறது. 

இலங்கையில் தகவல் அறியும் உரிமையை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக இருந்த SLPI இந்த வகையான தளங்கள் மற்றும் திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் ஊடாக இலங்கையில் நல்லாட்சியை அடைவதற்கான பணிவான பங்களிப்பில் அதிகளவிலான பிரஜைகள் 'மாற்றத்துக்கான முகவராக' மாற முடியும் என்று எதிர்பார்க்கின்றது. 

ஈ-ஸ்வாபிமானி என்பது டிஜிட்டல் பயன்பாட்டு உருவாக்கத்தில் சிறந்து விளங்குவதை குறிக்கும் ஒரு தேசிய முயற்சியாகும். இது இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரின் (ICTA) முன்னோடியான முயற்சியாகும். 

ஈ-ஸ்வாபிமானி திட்டத்தின் மூலம் உள்ளூர் தகவல் தொடர்பு தொழில்நுட்ப உருவாக்கிகளின் புத்தாக்கமான மற்றும் ஆக்கபூர்வமான தகவல் தொடர்பு தொழில்நுட்பம் சார்ந்த தயாரிப்புகளை உள்ளூர், சர்வதேச தளங்களில் காட்சிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குவதையும் சேவைகளை மேம்படுத்துவதனையும் இந்த முயற்சி உறுதியாக கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right