logo

பிரான்ஸில் ஆர்ப்பாட்டங்களால் 441 பொலிஸார் காயம், 457 பேர் கைது

Published By: Sethu

25 Mar, 2023 | 12:43 PM
image

பிரான்ஸில் ஓய்வூதிய மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது நேற்று நடந்த வன்முறைகளை அடுத்து, 457 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் 441 பொலிஸார் காயமடைந்துள்ளனர் எனவும் உள்துறை அமைச்சர் ஜெரால்;ட் டர்மனின் தெரிவித்துள்ளார்.  

அதிக எண்ணிக்கையான ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. அவற்றில் சில வன்முறையானவையாக மாறின' என அமைச்சர் டர்மனின் கூறியுள்ளார்.

பிரான்ஸ் முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு பாதுகாப்பு அளித்தமைக்காக பொலிஸாரை அவர் பாராட்டினார்.

பாரிஸ் நகரில் நடத்ப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது, தலையை மூடிய ஆடை மற்றும் முகக்கவசம் அணிந்த இளைஞர்கள் சிலர் ஜன்னல்களை அடித்து உடைத்ததுடன்,  குப்பைகளுக்கு தீவைத்துச் சென்றனர். 

ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோனின் ஓய்வூதிய மறுசீரமைப்புத் திட்டம் பாராளுமன்றத்தில் கடந்த வாரம் அங்கீகரிக்கப்பட்டது. 

இந்த சட்டமூலத்தை வாபஸ் பெறுமாறு ஆர்ப்பாட்டக்கார்கள் கோருகின்றனர்.

ஆனால், வன்முறைகள் காரணமாக சட்டத்தை வாபஸ் பெற வேண்டிய தேவையில்லை என உள்துறை அமைச்சர் ஜெரால்;ட் டர்மனின் கூறியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலியல்துன்புறுத்தல் குற்றம்சாட்டிய மல்யுத்த வீராங்கனையை குற்றச்சாட்டுக்குள்ளான...

2023-06-10 14:25:19
news-image

துப்பாக்கி, வாள் வைத்திருக்காத இந்துக்களுக்கு உதை...

2023-06-10 11:57:00
news-image

பிரித்தானிய முன்னாள் பிரதமர் ஜோன்சன், எம்.பி...

2023-06-10 11:18:34
news-image

டிரம்ப் பதவி விலகிச் செல்லும்போது அணுவாயுத...

2023-06-10 10:14:58
news-image

காண்டாஸ் விமான  ஊழியர்களின் சீருடை விதிகளில்...

2023-06-09 16:43:20
news-image

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள்...

2023-06-09 15:29:54
news-image

ரஷ்ய குடியிருப்புக் கட்டடத்தின் மீது ஆளில்லா...

2023-06-09 13:53:29
news-image

புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்துவதற்கான சட்டத்தை...

2023-06-09 12:46:05
news-image

டெல்லி மருத்துவமனையில் தீ விபத்து: 20...

2023-06-09 12:11:52
news-image

விமானத்தின் கதவு இருந்த இடத்தில் மேகம்...

2023-06-09 11:35:50
news-image

ஆப்கான் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: 11 பேர்...

2023-06-09 11:03:04
news-image

வீடியோ கேம்ஸ் மூலம் வளரிளம் பருவத்தினர்...

2023-06-09 10:43:28