அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 314 ரூபாவாகப் பதிவு

Published By: Digital Desk 3

24 Mar, 2023 | 05:06 PM
image

(நா.தனுஜா)

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவுப்பெறுமதி 314.74 ரூபாவாகவும், விற்பனைப்பெறுமதி 331.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட பணவீக்க அதிகரிப்பினால் கடந்த காலங்களில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துசென்றது.

இருப்பினும் கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் சடுதியான முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டதுடன், பின்னர் மீண்டும் அது வீழ்ச்சியடைந்தது.

ஆனால் நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதகாலத்தில் இலங்கைக்கு 2.286 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை அனுமதியளித்திருப்பதாகக் கடந்த திங்கட்கிழமை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதையடுத்து செவ்வாய்கிழமை மீண்டும் ரூபாவின் பெறுமதி உயர்வடைந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவுப்பெறுமதி 314.74 ரூபாவாகவும், விற்பனைப்பெறுமதி 331.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் பெண் தலைவர்களை வலுப்படுத்துவது தொடர்பில்...

2025-11-08 10:22:56
news-image

இன்றைய தங்க விலை நிலைவரம் !

2025-11-08 11:29:02
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2025-11-08 10:20:33
news-image

விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!

2025-11-08 09:49:31
news-image

பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது

2025-11-08 09:49:12
news-image

இருவேறு வீதி விபத்துக்களில் இருவர் பலி!

2025-11-08 09:37:30
news-image

காலி - ஜாகொட்டுவெல்ல கடற்கரையில் அடையாளம்...

2025-11-08 08:56:17
news-image

துங்கல்பிட்டியவில் சட்டவிரோத பீடி இலைகள் மற்றும்...

2025-11-08 08:55:50
news-image

நீர்கொழும்பு ஏத்துகல கடல் நீரோட்டத்தில் சிக்கியவர்...

2025-11-08 08:47:45
news-image

கெப்பட்டிபொல பகுதியில் வீடொன்றில் மின்சாரம் தாக்கி...

2025-11-08 08:45:42
news-image

இன்றைய வானிலை

2025-11-08 06:05:57
news-image

நாட்டு மக்களின் நலன் கருதி அரசாங்கம்...

2025-11-08 04:51:39