logo

இந்திய பாராளுமன்ற உறுப்பினர் பதவிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்: மக்களவை செயலகம் அறிவிப்பு

Published By: Sethu

24 Mar, 2023 | 03:11 PM
image

இந்திய பாராளுமன்ற உறுப்பினர் பதவிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய பாராளுமன்ற மக்களவை (லோக்சபா) செயலகம் அறிவித்துள்ளது.

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து குஜராத் மாநிலத்தின் சூரத் நகரிலுள்ள நீதிமன்றமொன்று நேற்று தீர்ப்பளித்தது.

அதையடுத்து அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற மக்களவையின்  செயலகம் இன்று தெரிவித்துள்ளது.

ராகுல் காந்திக்கு 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் மேன்முறையீடு செய்வறத்கு ஏதுவாக 30 ஆ திகதி வரை பிணை வழங்கப்பட்டது,

இந்நிலையில்  ராகுல் காந்தியின் எம்பி பதவி தொடர்பாக இந்திய மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்தனர். எம்.பி.க்கள், எம்.எல். ஏ.க்கள் குற்ற வழக்குகளில் 2 அல்லது 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் அவர்களது பதவியை பறிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் இடம் உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ல் பிரிவு 8 (3)-ன்படி 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக பதவி இழப்பார்கள் என்று வகுக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது. மக்களவை உறுப்பினர் பதவி மற்றும் வயநாடு தொகுதி எம்பி. பதவியையும் பறித்து மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலியல்துன்புறுத்தல் குற்றம்சாட்டிய மல்யுத்த வீராங்கனையை குற்றச்சாட்டுக்குள்ளான...

2023-06-10 14:25:19
news-image

துப்பாக்கி, வாள் வைத்திருக்காத இந்துக்களுக்கு உதை...

2023-06-10 11:57:00
news-image

பிரித்தானிய முன்னாள் பிரதமர் ஜோன்சன், எம்.பி...

2023-06-10 11:18:34
news-image

டிரம்ப் பதவி விலகிச் செல்லும்போது அணுவாயுத...

2023-06-10 10:14:58
news-image

காண்டாஸ் விமான  ஊழியர்களின் சீருடை விதிகளில்...

2023-06-09 16:43:20
news-image

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள்...

2023-06-09 15:29:54
news-image

ரஷ்ய குடியிருப்புக் கட்டடத்தின் மீது ஆளில்லா...

2023-06-09 13:53:29
news-image

புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்துவதற்கான சட்டத்தை...

2023-06-09 12:46:05
news-image

டெல்லி மருத்துவமனையில் தீ விபத்து: 20...

2023-06-09 12:11:52
news-image

விமானத்தின் கதவு இருந்த இடத்தில் மேகம்...

2023-06-09 11:35:50
news-image

ஆப்கான் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: 11 பேர்...

2023-06-09 11:03:04
news-image

வீடியோ கேம்ஸ் மூலம் வளரிளம் பருவத்தினர்...

2023-06-09 10:43:28