(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம் சட்டத்திற்கிணங்க செயற்படும். எவ்வாறெனினும் எவரது உரிமையையும் நாம் பறிக்கப் போவதில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க வெள்ளிக்கிழமை (24) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்குகள் மே மாதம் வரை முன்னெடுக்கப்படவுள்ளன.
அந்த வகையில் திறைசேரியின் செயலாளரினால் நீதிமன்றத்திற்கு விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று தேர்தல்கள் ஆணைக் குழுவும் நீதிமன்றத்திற்கு விடயங்களை சமர்ப்பித்துள்ளன. அந்த வகையில் அந்த தீர்மானங்களுக்கு இணங்க அரசாங்கம் செயற்படும்.
நீதிமன்றத்தில் வழக்கில் உள்ள விடயம் தொடர்பில் நான் சபையில் பேசுவதில்லை.
அத்துடன் தேர்தல் ஆணைக்குழுவானது நேற்று தீர்மானமற்ற அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சர் என்ற வகையில் அதுதொடர்பில் நான் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன்.
ஏனெனில் உறுதியற்ற முறையில் அவர்கள் செயற்பட முடியாது. அதேவேளை, சட்டத்தின் பிரகாரம் 19ஆம் திகதி உள்ளூராட்சி மன்றங்களை கலைத்தோம். உள்ளூராட்சி சபைகள் மூலம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவைகளை பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சி பல தடவைகள் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. நாம் அவ்வாறு செல்லவில்லை. எதிர்க்கட்சியே சென்றுள்ளது. நிதி தொடர்பான பிரச்சினை முழு நாடும் எதிர்கொண்டுள்ள பிரச்சனையாகும்.
அடுத்த வாரத்தில் நாம் எதிர்கொள்ளவுள்ள பெரும் நெருக்கடி தொடர்பில் நானும் ஜனாதிபதியும் தெரிவித்துள்ளோம். அரசாங்க ஊழியர்களுக்கான இரண்டு சம்பளங்களை புது வருடத்திற்கு முன்னர் வழங்க வேண்டும்.
விவசாயிகளுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். விசேட கொடுப்பனவுகளும் வழங்கப்பட வேண்டியுள்ளன. இவை அனைத்தையும் கருத்திற் கொண்டே நாம் செயற்பட வேண்டும். எவ்வாறெனினும் யாருடைய உரிமைகளை நாம் பறிக்கப் போவதில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM