ஒருநாள் ஊடக பயிற்சிப்பட்டறை

Published By: Digital Desk 5

24 Mar, 2023 | 05:27 PM
image

ஊடகத்துறையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்குத் தேவையான ஊடக பயிற்சிகள் மற்றும் ஊடக அறிவு தொடர்பான தெளிவுபடுத்தல்கள் அடங்கிய பயிற்சிப்பட்டறை 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

விவேகா பயிற்சி நிலையம் மற்றும் மகாவலி நிறுவகம் ஆகியன வீரகேசரியுடன் இணைந்து இந்த ஊடக கற்கை தொடர்பான ஒருநாள் பயிற்சிப்பட்டறையை முன்னெடுத்தன.

குறித்த பயிற்சிப்பட்டறையில் இரத்தினபுரி ஹப்புகஸ்தல ஸ்ரீ நாவலர்  தமிழ் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர் , யுவதிகள் பங்குபற்றினர்.

விவேகா பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகர் கே.ரி.குருசாமி தலைமை உரையாற்றி ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் வீரகேசரி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் செந்தில்நாதன் உரையாற்றினார்.

அதைத்தொடர்ந்து வீரகேசரி நிறுவனத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மாணவர்களுக்கு ஊடகம் தொடர்பான பயிற்சிகளை வழங்கினர்.

விவேகா பயிற்சி நிலையத்தின் தலைவர் பழ.புஷ்பநாதன், பொருளாளர் சத்தியமூர்த்தி, மகாவலி நிறுவகத்தின் ஸ்தாபகர் சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right