இன்றைய சூழலில் எம்முடைய இல்லங்களிலும், நாம் பணியாற்றும் அலுவலக சூழலிலும் நறுமணமூட்டிகள், நறுமண தெளிப்பான்கள், நறுமண கிறீம்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் எம்முடைய சுவாசப் பாதை மற்றும் நுரையீரலின் செயல் திறனில் பாதிப்பு ஏற்படுவதாகவும், காற்றை மாசுப்படுத்துவதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இன்று எம்முடைய வீடுகளில் இருக்கும் வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை, கழிவறை, குளியலறை, பூஜையறை என எங்கும் ஏதேனும் ஒரு வகையினதான நறுமணத்தை பரவச் செய்கிறோம்.
இதனால் எம்முடைய மனம் அமைதியாகவும் உத்வேகத்துடன் செயல்படுகிறது என நம்பிக்கை கொண்டிருக்கிறோம். விருந்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர்.. வீட்டிற்கு வரும்போது அவர்கள் இந்த நறுமணத்தை ரசித்து நுகர்கிறார்கள்.
ஆனால் இது போன்ற நறுமணமான சூழலில் தொடர்ந்து இருப்பதால் எம்முடைய சுவாச பாதை மற்றும் நுரையீரல் ஆகியவற்றில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். மேலும் சிலர் அலுவலகம் மற்றும் பணியிடச் சூழலில் நறுமணத்தை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள்.
இது நறுமணத்தை ஒவ்வாமையாக கொண்டிருப்பவர்களுக்கு பாரிய சுகவீனத்தை ஏற்படுத்துகிறது. மேலும் ஆஸ்துமா நோயாளிகளுக்கும், சுவாச பிரச்சினை உள்ளவர்களுக்கும் இந்த நறுமணச் சூழல் ஆரோக்கிய கேட்டை உண்டாக்குகிறது.
இதுபோன்ற ரசாயனம் கலந்த மணமூட்டி மற்றும் தெளிப்பான்களில் ஹைட்ரோ காபன் எனும் ரசாயன மூலக்கூறு பிரதானமாக சேர்க்கப்பட்டிருக்கிறது. இவை எம்முடைய சுவாசத்திற்கும், நுரையீரலுக்கும் எதிர் விளைவை ஏற்படுத்தக் கூடியவை.
இத்தகைய மணமூட்டிகளை பயன்படுத்தும் போது போதிய அளவிற்கு சூரிய வெளிச்சம் அறைகளில் உட்புக வேண்டும். ஏனெனில் சூரிய ஒளியில் இந்த ஹைட்ரோ காபன் மூலக்கூறுகள் சிதைக்கப்பட்டு, அதன் வீரியம் குறைக்கப்படுகிறது.
தொடர்ந்து நறுமணத்தை விரும்புபவர்கள் நாளடைவில் நாட்டப்பட்ட நுரையீரல் தொற்று பாதிப்பிற்கு ஆளாக நேரிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அதனால் அறைகளில் மனமூட்டிகளை பயன்படுத்தும் போது அளவாகவும், சூரிய ஒளியுடன் இணைந்தும் இதனை பயன்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
டொக்டர் சீனிவாஸ்,
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM