கதிர்வீச்சு சுனாமியை ஏற்படுத்தும் ஆயுதத்தை பரிசோதித்ததாக வட கொரியா தெரிவிப்பு

Published By: Sethu

24 Mar, 2023 | 02:36 PM
image

கதிர்வீச்சு சுனாமியை ஏற்படுத்தக்கூடிய நீரடி ஆயுதமொன்றை தான் பரிசோதித்ததாக வட கொரியா தெரிவித்துள்ளது. 

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், நேரடியாக இந்த சோதனையை மேற்பார்வை செய்தார் என வட கொரிய ஊடகமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.

தென் ஹம்ஜியோங் மாகாணத்தின் கரையோரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த ரகசிய ஆயுதக் கலம் கடலில் விடப்பட்டதாகவும், 80 முதல் 150 மீற்றர் ஆழத்தில் 59 மணித்தியாலங்கள் இந்த ஆயுத கலம் பயணம் செய்து பின்னர் கிழக்கு கரையோரத்தில் வெடிக்க வைக்கப்பட்டதாகவும் கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.

ஹேய்ல் என இந்த ஆயுதத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு கொரிய மொழியில் சுனாமி என அர்த்தமாகும்.

எந்தவொரு கடற்கரையிலும் துறைமுகத்திலும் இந்த ஆளில்லா கலத்தை பயன்படுத்த முடியும் என கேசிஎன்ஏ மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வடகொரியாவின் ஆத்திரமூட்டல்களுக்கு அது விலை கொடுக்கச் செய்யப்படும் என தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலக்கெடு நிறைவு: கண்ணீருடன் விடைபெற்று அட்டாரி...

2025-04-28 10:45:20
news-image

ஈரான் துறைமுக வெடிப்பு சம்பவம் :...

2025-04-28 08:59:10
news-image

இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள்...

2025-04-27 13:17:23
news-image

கனடாவின் வான்கூவரில் வாகனத்தினால் பொதுமக்கள் மீதுமோதிய...

2025-04-27 10:48:18
news-image

பஹல்காம் தாக்குதல்; ராணுவம் மூலம் பதிலடி...

2025-04-27 10:35:30
news-image

இது 1000 வருட பிரச்னை; இந்தியா-பாகிஸ்தான்...

2025-04-27 10:24:03
news-image

ஈரான் துறைமுக வெடிப்பு சம்பவம் :...

2025-04-27 10:14:40
news-image

ஈரானில் பாரிய வெடிப்பு சம்பவம் :...

2025-04-26 17:59:11
news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் திருவுடல் நல்லடக்கம்

2025-04-26 17:42:37
news-image

பாகிஸ்தான் விமான நிலையத்தில் தீ விபத்து

2025-04-26 22:50:47
news-image

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்ஸின்...

2025-04-26 14:50:30
news-image

மரபு ரீதியாக மூடப்பட்டது நித்திய இளைப்பாறிய...

2025-04-26 06:53:02