(எம்.ஆர் எம்.வசீம்.இராஜதுரை ஹஷான்)
ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை கொண்டுவந்தால் மாத்திரம் ஊழல்களை தடுத்து விட முடியாது ஊழல் மூலம் சம்பாதித்த சொத்துக்களை அரசுடமையாக்கும் ஏற்பாடுகளை ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் உள்ளடக் வேண்டும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு தற்போது பிரதான பேசுபொருளாக உள்ளது.இதற்கு முன்னர் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சுழற்சியில் உள்வாங்கி 17 ஆவது தடவையாக சென்றுள்ளோம். முதலில் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று பின்னர் பின்வாங்கி நெருக்கடியென வரும் போது மீண்டும் போகின்றோம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியாக இருக்கின்றார். நாட்டில் வரிகளை அதிகரித்துள்ளதால் தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. போராட்டங்களை பொலிஸார். இராணுவத்தை கொண்டு முடக்குகின்றார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கமைய ஊழல் ஒழிப்பு சட்டத்தை கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதி கூறுகின்றார். அந்த சட்டத்தின்மூலம் மாத்திரம் ஊழலை தடுத்துவிட முடியாது. அதில் ஊழல்களால் பெற்றுக்கொண்ட சொத்துக்களை சுவீகரிக்கக்கூடிய ஏற்பாடுகளை உள்ளடக்க வேண்டியுள்ளது.
இதேவேளை புதிய மத்திய வங்கி சட்டத்திருத்தத்தை கொண்டு வரும் போதும், சில திருத்தங்களை முன்வைக்க வேண்டியுள்ளது. அரசியல் தலையீடுகள் இல்லாது செயற்படக்கூடிய வகையில் அமைய வேண்டும். மறுசீரமைப்பு பணிகளில் இருந்து விட்டுச் செல்லக்கூடாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM