சதி செய்கின்றன எதிர்க்கட்சிகள் - பாலித ரங்கே பண்டார

Published By: Vishnu

24 Mar, 2023 | 03:23 PM
image

(எம்.மனோசித்ரா)

பிரச்சினைகள் அற்ற நாடாக இலங்கை கட்டியெழுப்பப்ட்டுக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், வெளிநாட்டு தூதுவர்கள் ஊடாக அதனை முறியடிப்பதற்கு எதிர்க்கட்சிகள் சதித்திட்டம் தீட்டுகின்றன. 

நாட்டை நேசிப்பதாகக் கூறுபவர்களாலேயே இவ்வாறான மோசமான நடவடிக்கைகள் முன்னெடுப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்தி தினத்தை முன்னிட்டு இன்று (24) வெள்ளிக்கிழமை ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த நாடாகக் காணப்பட்ட இலங்கையை மீண்டும் உயிர்ப்பித்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆவார். 

இந்த சவாலை ஏற்பதற்கு அனைவரும் அஞ்சி ஓடிய போது , தனியொரு நபராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போராடி வெற்றி பெற்றுள்ளார்.

ஐ.தே.க. பொது செயலாளராக தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதற்கு கையெழுத்திடுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றமையை பாக்கியமாகக் கருதுகின்றேன். அவரால் நாட்டு மக்களுக்கு நிம்மதியாக சுவாசிக்கக் கூடிய சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவு பொருட்கள் , உரம் உள்ளிட்டவற்றின் விலைகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிரச்சினைகள் அற்ற நாட்டை கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் போது எதிர்க்கட்சிகள் வெளிநாட்டு தூதுவர்களை அவசரமாக சந்தித்து அந்த முயற்சிகளை முறியடிப்பதற்கு சதித்திட்டம் தீட்டுகின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியை காலம் தாழ்த்துமாறும், மேலும் கடுமையான நிபந்தனைகளை முன்வைக்க வலியுறுத்துமாறும் தூதுவர்களிடம் கோரியுள்ளன. நாட்டை நேசிப்பதாகக் கூறுபவர்களே இவ்வாறு செயற்படுகின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈ.பி.எப்., ஈ.ரீ.எப். இணைப்புக்கு எதிர்ப்பு; தொழிற்சங்கங்கள்...

2026-07-17 14:34:16
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மரணங்கள் : வழக்கு...

2026-07-17 16:18:43
news-image

புகைப்பிடிப்பதால் தினமும் 50 உயிரிழப்புகள்; ஆண்டுக்கு...

2026-07-17 16:19:13
news-image

எரிபொருள் விலையில் பாரியதொரு மாற்றம் ஏற்படாது...

2026-07-17 16:19:41
news-image

போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படும்...

2026-07-17 16:20:09
news-image

மண்ணெண்ணெயில் இயங்கிய 100 பஸ்கள் அடையாளம்;...

2026-07-17 22:26:04
news-image

அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு...

2026-07-17 22:20:42
news-image

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு...

2026-07-17 22:08:58
news-image

தொழிற்கல்வியை வலுப்படுத்த 2027 வரவுசெலவுத் திட்டத்தில்...

2026-07-17 22:06:56
news-image

நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும்...

2026-07-17 21:48:04
news-image

சிறுபான்மைக் கட்சிகளின் புதிய கூட்டணி எமக்குத்...

2026-07-17 14:35:02
news-image

ஊழியர்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது...

2026-07-17 16:33:07