மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் சத்துருக்கொண்டான் பகுதியில் பஸ் வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (23) இரவு இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், பஸ் சாரதியை கைது செய்துள்ளதாகவும், உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லை எனவும் கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தனியார் சொகுசு பஸ் வண்டி சம்பவ தினமான நேற்றிரவு 10 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து பயணித்த போது கொழும்பு வீதியின் சத்துருக்கொண்டான் பகுதியில் பெண் ஒருவர் மீது மோதியதை அடுத்து சம்பவ இடத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த பெண் அடையாளம் காணப்படாத நிலையில் சடலத்தை மீட்டு மட்டு. போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததுள்ளதுடன், பஸ் சாரதியைக் கைது செய்துள்ளதாகவும் குறித்த பெண் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் கொக்குவில் பொலிஸாருடன் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM