பெல்டிக் நாடுகளின் எல்லையில் அண்மைக்காலமாக நேட்டோவை சேர்ந்த அதிகளவிலான அமெரிக்க தரப்பு விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டு வருவதாகவும், பதிலுக்கு ரஷ்யா தனது படைகளை குறித்த பிராந்தியத்தில் குவித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

லிதுனியா மற்றும் எஸ்டோனிய உள்ளிட்ட பால்டிக் கூட்டனி நாடுகளிற்கு அவற்றின் அந்நிய நாடுகளிலிருந்து பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாக நேட்டோ அமைப்பு கூறிவந்தது. இந்நிலையில் அந்நாடுகளின் கிழக்கு எல்லையான ரஷ்ய எல்லைப் பகுதியில் நேட்டோவைச் சேர்ந்த அதிகளவிலான அமெரிக்க விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா ஊடுறுவியதாக குற்றங்கள் சுமத்தப்பட்ட நிலையில்தற்போது அதிரடிப்படைகளை ரஷ்ய எல்லைப்பகுதியில் குவித்துள்ளமை ஐரோப்பிய பிராந்தியத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்க நேட்டோ படைகளுக்கான கட்டுபாடுகளை அதிகரிக்க போவதாகவும் ரஷ்ய பெல்டிக் நாடுகளுக்கான உறவை பலப்படுத்துவதற்கு செயற்படவுள்ளதாகவும் கூறிவந்தார்.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கிணங்க பெல்டிக் பிராந்தியத்தில் நேட்டோ படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. 

2014 ஆம் தொடரப்பட்ட உக்ரைனின் கிரிமியா வகையான தாக்குதல் திட்டத்திலிருந்து தம்மை பாதுகாக்கவே அமெரிக்கப்படைகள் தமது நாட்டில் நிலைகொண்டுள்ளதாக லித்துவேனிய ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்iகியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பெல்டிக் நாடுகளுடன் ரஷ்யாவின் உறவை வலுப்பெறச் செய்வதாக கூறிவந்த நிலையில் தற்போது நேட்டோவின் அமெரிக்க அதிரடிபடையை பால்டிக் நாடுகளின் எல்லைப்பகுதியில் குவித்துள்ளமை மற்றும் ரஷ்யாவின் பதில் படைகுவிப்புகள் என்பவை மீண்டுமொரு பனிப்போரை உருவாக்குமோ எனும் அச்சத்தை ஐரோப்பிய பிராந்தியத்தில் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.