நீதித்துறையை அச்சுறுத்துவதை நிறுத்தவேண்டும் - சிவில் சமூகத்தினர் கல்விமான்கள் கூட்டாக வேண்டுகோள்

Published By: Rajeeban

24 Mar, 2023 | 12:23 PM
image

நீதித்துறையை அச்சுறுத்துவதை கைவிடவேண்டும், ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை கைவிடவேண்டும்  தேர்தலை நடத்தவேண்டும் என சிவில் சமூக பிரதிநிதிகள் பலர் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை உச்சநீதிமன்றம் மீறியுள்ளது என்ற பொய்யான சாக்குப்போக்குடன் நீதித்துறையை அச்சுறுத்துவதற்கு ஜனாதிபதியும்  அரசாங்கத்தின் சில உறுப்புனர்களும் மேற்கொள்ளும் முயற்சிகளை திகைப்புடன் அவதானிப்பதாக சிவில் சமூக பிரதிநிதிகள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை வழங்காமலிருப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதை தொடர்ந்தே இந்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

2023 இல் உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை எந்த அரசஸ்தாபனமும்  நிறுத்திவைப்பதை தடுக்கும் இடைக்கால உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் ஜனநாயக செயற்பாடுகளை குறைமதிப்பீட்டிற்கு உட்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள இந்த புதிய நடவடிக்கைகளை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம் என தெரிவித்துள்ள அவர்கள்இந்த விடயத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளதுபோல நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியும் சட்டத்தின் ஆட்சி நாட்டு மக்களின் உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை கடும் அவமதிப்பு செய்வதாகும்  எனவும் சிவில் சமூக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27