விக்ரம் பிரபு நடிக்கும் 'ரெய்டு' படத்தின் குறு முன்னோட்டம் வெளியீடு

Published By: Ponmalar

24 Mar, 2023 | 01:37 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் வாரிசு நடிகரான விக்ரம் பிரபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ரெய்டு' எனும் திரைப்படத்தின் குறு முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் சிலம்பரசன் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் கார்த்தி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ' ரெய்டு '. இதில் விக்ரம் பிரபு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதிவ்யா நடித்திருக்கிறார்.

இவர்களுடன் நடிகை அனந்திகா நடிகர்கள் சௌந்தரராஜா, டேனியல் ஆனி போப், ஹரிஷ் பெராடி, லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கதிரவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். 

கன்னடத்தில் வெளியான 'தகரு' எனும் திரைப்படத்தின் மறுஉருவாக்கமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு இயக்குநர் எம். முத்தையா வசனம் எழுதி இருக்கிறார்.

ஓபன் ஸ்கிரீன் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ் கே கனிஷ்க் மற்றும் ஜி. மணிகண்ணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இதனை எம் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் எம். முத்தையா வழங்குகிறார்.

இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியுட்டிற்கு தயாராகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் குறு முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் விக்ரம் பிரபுவின் எக்சன் காட்சிகளும், அனல் தெறிக்கும் பஞ்ச் டொயலாக்குகளும் இடம்பெற்றிருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37