நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'குஷி' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Ponmalar

24 Mar, 2023 | 01:38 PM
image

தெலுங்கின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குஷி' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினர் பிரத்யேக பதாகையை வெளியிட்டிருக்கிறார்கள்.

தெலுங்கு  இயக்குநரான சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'குஷி'. இதில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்திருக்கிறார்.

இவர்களுடன் ஜெயராம், சச்சின் கடேகர், முரளி சர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் தேவரகொண்டா- சமந்தா ஜோடிக்கு ரசிகர்களிடையேயும், திரையுலக வணிகர்களிடையேயும் வரவேற்பும், எதிர்பார்ப்பும் உள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் திகதியன்று தமிழிலும் வெளியாகிறது.

இதற்காக வெளியிடப்பட்டுள்ள பிரத்யேக பதாகையில் விஜய் தேவரகொண்டாவும் நடிகை சமந்தாவும் காதலுடன் கைகோர்த்துக்கொண்டு தோன்றுவது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37