திருகோணமலையில் வாசல் கவிதை சஞ்சிகை வெளியீடு!

Published By: Ponmalar

24 Mar, 2023 | 01:49 PM
image

வாசல்  வாசகர் வட்டத்தின் வெளியீடான வாசல் கவிதை சஞ்சிகை நேற்று மாலை  23.03.2023 (வியாழக்கிழமை) திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு, வாசல் வாசகர் வட்டத்தின் தலைவர் ஊடகவியலாளர் அரசரெத்தினம் அச்சுதனின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு, ஆசியுரையை திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் பிரதம குரு சோ.இரவிச்சந்திர குருக்கள் ஆசியுரை வழங்கியதுடன் சஞ்சிகையின் முதல் பிரதியையும் பெற்றுக்கொண்டார் , பிரதம விருந்தினராக திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் சூ.பார்த்தீபன் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டின் நந்தவனம் சஞ்சிகையின் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன், கௌரவ விருந்தினராக மூத்த கவிஞர் அம்.கௌரிதாசன், வாசல் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் ச.திருச்செந்தூரன், கவிஞர் க .யோகானந்தம், தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில், தமிழ்நாட்டின் நந்தவனம் சஞ்சிகையின் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன், திருகோணமலை அன்புவழிபுரத்தை சேர்ந்த நாடகக்கலைஞர் சிவநாமம் ஜெயராசா ஆகியோர் கலைக்கேசரி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right