வவுனியா ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளம் முருகன் ஆலயம் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை ஓமந்தைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வவுனியா ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளம் முருகன் ஆலயம் கடந்த வருடம் (12.12.2016) அன்று இரவு திருடர்களால் உடைக்கப்பட்டு ஆலய மூலஸ்தானத்திலிருந்த வேல் உட்பட ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடர்கள் திருடிச் சென்றிருந்தனர்.

குறித்த ஆலய நிர்வாக சபையினர் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து விசாரணைகளை மேற்கொண்டு இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை இன்று கைதுசெய்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் ஓமந்தை பொலிசார் தெரிவித்துள்ளனர்.