விமானப்படையின் முன்னாள் அதிகாரி கறுப்புபட்டியலில் - நியாயப்படுத்துகின்றது விமானப்படை

Published By: Rajeeban

24 Mar, 2023 | 11:02 AM
image

விமானப்படையின் முன்னாள்  அதிகாரியை கறுப்புபட்டியலில் சேர்த்துள்ளதை இலங்கை விமானப்படை நியாயப்படுத்தியுள்ளது.

எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி உள்நிர்வாகத்தை முன்னெடுப்பதை நோக்கமாக கொண்டே  இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக இலங்கை விமானப்படையின் ஊடக இயக்குநர் துசான் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற எயர்வைஸ் மார்சல் சம்பத் துயாகொந்த எந்த முகாமுக்கும் தளத்திற்கும் செல்ல முடியாது என தெரிவித்துள்ள விமானப்படை பேச்சாளர் விமானப்படையின் வசதிகள் எதனையும் அனுபவிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

விமானப்படையின் ஓய்வு பெற்ற அதிகாரியொருவர் வழமையாக அரசியலில் ஈடுபடலாம் ஆனால் இந்த விடயம் வித்தியாசமானது என தெரிவித்துள்ள  விமானப்படையின் பேச்சாளர் இந்த அதிகாரி விமானப்படையின் அனைத்து சலுகைகளையும் அனுபவிக்கின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக இவர் எங்கள் முகாம்களிற்குள் நுழைந்து ஏனைய விமானப்படையினரை தனது செல்வாக்கிற்கு உட்படுத்த முயன்றால்அதனால் பிரச்சினைகள் ஏற்படும் எனவும் விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுகின்றார் என்பதற்காக அரசாங்கம் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியொருவரை அரசாங்கம் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் ஹர்சனநாணயக்கார இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கட்சிக்குள் முன்னாள் இராணுவவீரர்கள் பிரிவொன்றை உருவாக்கியுள்ளது என தெரிவித்துள்ள ஹர்சன ராஜகருண இந்த பிரிவில் இணைந்துகொண்டமைக்காக முன்னாள் விமானப்படை அதிகாரி  எயர்வைஸ்மார்சல் சம்பத் துயாகொந்தவை அரசாங்கம் தடைசெய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற அதிகாரியொருவருக்கு தனது தனிப்பட்ட விடயங்களை தெரிவு செய்வது அடிப்படை உரிமை என ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார்.

என்ன காரணத்திற்காக முன்னாள் விமானப்படை அதிகாரி கறுப்புபட்டியலில் இணைக்கப்பட்டார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவருக்கு எதிராக என்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்ன விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் கேள்வி எழுப்பியுள்ள ஹர்சன ராஜகருண கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட்டமை குறித்து முன்னாள் அதிகாரிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின்உள்நாட்டு யுத்தத்தின்போது எம்ஐ24 ஹெலிக்கொப்டர் படையணியின் விமானியாக பணியாற்றியவரே கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21