உத்தியோகபூர்வமற்ற எல்லைக் கடவைகள் ஊடாக வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை நிராகரிப்பதற்கான இணக்கப்பாடொன்று அமெரிக்கா மற்றும் கனடா இடையே ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இது குறித்து இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.
இந்த உடன்படிக்கையின்படி, உத்தியோகபூர்வமற்ற எல்லைக் கடவைகள் ஊடாக வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை அதிகாரிகள் திருப்பி அனுப்ப முடியும்.
அமெரிக்காவின் நியூ யோர்க் மாநிலத்துக்கும் கனடாவின் கியூபெக் மாகாணத்துக்கும் இடையிலான, நியூ யோர்க்கின் ரொக்ஹாம் வீதியைக் கடந்து செல்ல முயற்சிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த உடன்படிக்கை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவிலிருந்து வன்முறைகள் போன்ற காரணங்களால் வெளியேறும் 15,000 பேரை கனடா ஏற்றுக்கொள்ளும். இது அமெரிக்காவின் தென்பகுதியில் மெக்ஸிக்கோவுடனான எல்லையில் அமெரிக்காவின் அழுத்தத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இணக்கப்பாடானது 2004 ஆம் ஆண்டின் பாதுகாப்பான 3 ஆம் நாடு ஒப்பந்தத்தை திருத்தம் செய்வதாகும். 2004 ஆம் ஆண்டின் ஒப்பந்தப்படி புகலிடக் கோரிக்கையாளர்கள் முதலில் சென்றடையும் பாதுகாப்பான நாட்டில் புகலிடம் கோர வேண்டும்.
உத்தியோகபூர்வமற்ற எல்லைக் கடவைகள் ஊடாக வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை கனடா திருப்பி அனுப்ப முடியாதிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM