கிராஞ்சி கடலட்டை பண்ணை வழக்கு ; மக்களின் முறைப்பாடுகள் விசாரிக்கப்பட வேண்டும் நீதவான் உத்தரவு!

Published By: Digital Desk 3

24 Mar, 2023 | 10:08 AM
image

கிளிநொச்சி கிராஞ்சி கடலட்டை பண்ணை அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மக்களின் முறைப்பாடுகளை விசாரிக்க வேண்டும் என்று வவுனியா மேல் நீதிமன்றால் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் வழக்கு தவணையிடப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சி பகுதியில் அமைக்கப்பட்டுவரும் கடலட்டை பண்ணைக்கு அப்பகுதிமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் குறித்த விடயம் தொடர்பாக வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு ஒன்றினையும் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த வழக்கு நேற்றையதினம் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்வரும் 5 ஆம் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது,

கிளிநொச்சி கிராஞ்சியில் கடலட்டை பண்ணை அமைக்கப்படுவதாக அங்கு வசிக்கும் மக்கள் அரச அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்திருந்தனர். ஆனால் அந்த முறைப்பாட்டின் மீது எதுவித நடவடிக்கைகளும் எடுக்காமல் கடலட்டை அமைப்பதை ஊக்குவிப்பதுபோல அரச அதிகாரிகளின் நடவடிக்கைகள் அமைந்தமையால், பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கினை தொடுத்திருந்தார்கள். 

ஏற்கனவே உருவாக்கப்பட்ட பண்ணைகளை இடைநிறுத்துவதுடன், புதிதாக அமைக்கும் பணிகளை முன்னெடுக்காத வண்ணம் ஒரு கட்டளையை இயற்றுமாறும் ரிட்மனு ஊடாக கோரிக்கைகளை விடுத்திருந்தனர். அந்தவகையில் கடந்த மாதம் வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மனுவில் குறிப்பிடப்பட்ட அரச அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்ததுடன், நேற்றையதினம் குறித்த வழக்கு அழைக்கப்பட்டிருந்தது. எனினும் அவர்கள் சார்பாக அரச சட்டத்தரணி தோன்றாமையினால் அந்த வழக்கு திகதியிடப்பட்டுள்ளது.  

அத்துடன் அந்தபகுதியில் சட்டமுறையற்ற வகையில் பண்ணை அமைத்துள்ளமைக்கு மக்கள் ஆட்சேபம் வெளியிட்டுள்ளனர். பலபேருக்கு முறையற்ற வகையில் உரிமம் வழங்கப்பட்டிருக்கின்றது. 

அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் அது வழங்கப்பட்டிருக்கின்றது. அந்த பகுதியில் பண்ணை அமைப்பதற்கான சூழல் இல்லாமையுடன், அதற்காக கடல் பிராந்தியத்தையும் மறைத்து பாரம்பரியமாக மீன்பிடி தொழிலை முன்னெடுப்பவர்கள் பாதிக்கப்படும் வண்ணம் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். அதற்கு அரச அதிகாரிகள் துணைபோயுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். 

நேற்றையதினம் நீதிமன்றில் அந்த அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தனர். தாங்கள் சரியான முறைப்படியே அதனை செய்துள்ளதாக நீதிபதிக்கு பதில் அளித்துள்ளனர். எனினும் மக்களின் முறைப்பாடுகள் விசாரிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதவான். எதிர்வரும் ஐந்தாம் மாதத்திற்கு வழக்கினை தவணையிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச பயங்கரவாதத்தை தக்க வைக்கும் கலாசாரமே...

2023-06-01 21:30:41
news-image

நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு நாணய நிதியத்தின் தொடர்ச்சியான...

2023-06-01 21:33:04
news-image

சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் -...

2023-06-01 21:32:11
news-image

பணவீக்கம், உணவுப் பணவீக்கம் என்பவற்றில் 10...

2023-06-01 21:31:24
news-image

நாட்டைக் கட்டியெழுப்பும் தேசிய நிலைமாற்றத்துக்கான திட்டவரைபடத்தை...

2023-06-01 20:34:59
news-image

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரை...

2023-06-01 20:10:41
news-image

வட்டிவீதங்களைக் குறைத்தது மத்திய வங்கி

2023-06-01 17:20:17
news-image

தேசிய வருமான வரி : வருடத்திற்கு...

2023-06-01 17:26:55
news-image

நிலையான பொருளாதார மீட்சிக்கு ஜனாதிபதி ரணிலின்...

2023-06-01 16:53:59
news-image

சீன முதலீட்டில் பண்ணையா ? அங்கஜனுக்கு...

2023-06-01 17:23:46
news-image

உத்தேச சட்டமூலங்கள் குறித்து ஆராய எதிர்க்கட்சியால்...

2023-06-01 21:34:08
news-image

தேசிய சேமிப்பு வங்கியின் ஆண்டறிக்கை ஜனாதிபதியிடம்...

2023-06-01 21:28:26