இந்திய மீனவர்கள் 12 பேருக்கு ஏப்ரல் 6 ஆம் திகதிவரை விளக்கமறியல்

Published By: Digital Desk 3

24 Mar, 2023 | 09:30 AM
image

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரையும் ஏப்ரல் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் நேற்று (23) உத்தரவிட்டுள்ளது.

நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இரண்டு படகையும் அதிலிருந்த பன்னிரெண்டு மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி அழைத்து வந்த கடற்படையினர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இந்திய மீனவர்களுக்கு எதிராக கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தினரால் ஊர்காவற்றுறை நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்ட வழக்குத்தாக்கலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட ஊர்காவற்றுறை நீதவான் பன்னிரெண்டு மீனவர்களையும் பதின்நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

2026-02-13 08:42:59
news-image

விபத்தில் சிக்கி 17 வயது இளைஞன்...

2026-02-13 08:24:52
news-image

கிழக்கு, மத்திய, ஊவா உள்ளிட்ட பல...

2026-02-13 06:24:32
news-image

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு...

2026-02-12 16:29:36
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரச்சினைக்கு...

2026-02-12 20:25:41
news-image

கல்விச் சபையை நிறுவுவ நிபுணர் குழு...

2026-02-12 16:50:56
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான கொடுப்பனவுகளுக்காக...

2026-02-12 16:31:16
news-image

இலங்கை கோரினால் ஆதரவு வழங்க தயார்...

2026-02-12 20:25:22
news-image

வாக்குறுதிகளை நிறைவேற்றியது அரசாங்கம் - கொழும்பு...

2026-02-12 20:24:48
news-image

ஆடை ஏற்றுமதியில் பிராந்தியத்திலேயே மிக அதிக...

2026-02-12 20:24:29
news-image

சிறுவர் உழைப்பை ஒழிக்க கல்வி மறுசீரமைப்பே...

2026-02-12 16:37:44
news-image

அடிப்படை உரிமைகளைப் பணயம் வைத்து தேசிய...

2026-02-12 20:24:09