ஆஸி. ஆரம்பத் துடுப்பாட்டத்திற்கு பஞ்சமில்லை : ஆரம்ப வீரராக வோர்னர், ஹெட் வரிசையில் மார்ஷ்

Published By: Digital Desk 5

24 Mar, 2023 | 09:21 AM
image

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலிய அணியில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களுக்கு பஞ்சம் இல்லை என்பதை மிச்செல் மார்ஷ் இப்போது நிரூபித்துள்ளார்.

டேவிட் வோர்னர், ட்ரவிஸ் ஹெட் ஆகியோருடன் இப்போது மிச்செல் மார்ஷ் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இணைந்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின்போது டேவிட் வோர்னர் உபாதைக்குள்ளானதால் சரவ்தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆரம்ப வீரர் ஸ்தானத்தை மிச்செல் மார்ஷ் வெற்றிகரமாக நிரப்பியுள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள இந்த வருடத்தில் ஆரம்ப வீரராக விளையாடும் முதல் சந்தர்ப்பத்திலேயே மிச்செல் மார்ஷ் 2 அரைச் சதங்களைக் குவித்து அசித்தியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக வான்கடேயில் நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் 81 ஓட்டங்களை விளாசிய மிச்செல் மார்ஷ், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் 66 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். சென்னையில் நடைபெற்ற கடைசிப் போட்டியிலும் திறமையை வெளிப்படுத்திய அவர் 47 ஓட்டங்களைப் பெற்று ஆரம்ப வீரராக தன்னால் ஜமாய்க்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.

துபாயில் 2021இல் நடைபெற்ற இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 3ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலியாவை உலக சம்பியனாக்கியதுடன் ஆட்டநாயகன் விருதையும் மிச்செல் மார்ஷ் வென்றிருந்தார்.

இந்தியாவுடனான தற்போதைய தொடரில் அபார ஆற்றல்களை துடுப்பாட்டத்தில் வெளிப்படுத்தி அவுஸ்திரேலியாவுக்கு 2 - 1 என்ற தொடர் வெற்றியை ஈட்டிக்கொடுத்த மிச்செல் மார்ஷ் தொடர்நாயகன் விருதையும் வென்றெடுததார்.

சென்னையில் புதன்கிழமை (22) நடைபெற்ற போட்டியில் மீள் வருகை தந்த டேவிட் வோர்னர் ஆரம்ப வீரர் ஸ்தானத்திற்கு பதிலாக 4ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடினார். 142 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் டேவிட் வோர்னர் ஆரம்ப வீரராக அல்லாமல் விளையாடியது இதுவே இரண்டாவது தடவையாகும்.

இந்தியாவில் அக்டோபர் மாதம் உலகக் கிண்ண கிரிக்கெட் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது துடுப்பாட்ட வரிசையைப் பலப்படுத்தும் நோக்கத்துடன் சில பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபடப்போவதாக அவுஸ்திரேலியா கூறிவந்தது.

எவ்வாறாயினும் டேவிட் வொர்னர் வழமையான ஆரம்ப வீரராக இந்த வருட பிற்பகுதியல் விளையாடுவார் என கருதப்படும் அதேவேளை, பவர் ப்ளேயின்போது களத்தடுப்பு கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி விளாசி அடிக்கக்கூடிய வல்லமை மிச்செல் மார்ஷிடம் தாராளமாக இருக்கிறது என்பதை ஆஸி. அணி முகாமைத்துவம் அறிறயாமல் இல்லை. 

அதேவேளை ட்ரவிஸ் ஹெட்டும் ஆரம்ப வீரராக அதிரடி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியவர். எனவே டேவிட் வோர்னர் ஓய்வு பெறும்வரை அவுஸ்திரேலியாவின் ஆரம்பத்துடுப்பாட்டத்திற்கு பஞ்சம் இல்லை என்றே கூறவேண்டியுள்ளது.

மூன்றாவது போட்டியில் வெற்றியீட்டி தொடரைக் கைப்பற்றியது ஆஸி.

இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான சர்வசேத ஒருநாள் கிரிக்கெட் தொடர் 1 - 1 என சமமான நிலையில் தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி சென்னையில் புதன்கிழமை (22) நடைபெற்றது.

அப் போட்டியில் 21 ஓட்டங்களால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தனதாக்கிக்கொண்டது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 49 ஓவர்களில் 269 ஓட்டங்களைக் குவித்தது.

துடுப்பாட்டத்தில் மிச்செல் மார்ஷ் (47), ட்ரவிஸ் ஹெட் (33), அலெக்ஸ் கேரி (38), மானுஸ் லபுஸ்சான் (28), சோன் அபொட் (26), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் (25) ஆகியோர் 25 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலிய அணியைப் பலப்படுத்தினர்.

இந்திய பந்துவீச்சில் ஹார்திக் பாண்டியா 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 56 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

270 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 49.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 248 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

விராத் கோஹ்லி (52), ஹார்திக் பாண்டியா (40), ஷுப்மான் கில் (37), கே.எல். ராகுல் (32), ரோஹித் ஷர்மா (30) ஆகியோர் முன்வரிசை மற்றும் மத்திய முன்வரிசையில் பிரகாசித்த போதிலும் மத்திய பின்வரிசை மற்றும் பின்வரிசையில் யாரும் பிரகாசிக்காததால் இந்தியா தோல்வியைத் தழுவ நேரிட்டது.

பந்துவீச்சில் அடம் ஸம்ப்பா 45 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அஷடன் அகார் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20