(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இந்த நாட்டில் மத தீவிரவாதம் செயற்படும் அபாயம் உள்ளது. எனவே மதம் மற்றும் மொழியை மட்டும் போதிக்கும் பதிவு செய்யப்படாத மத்ரஸா பாடசாலைகள் குறித்தும், வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்து தீவிரவாத கருத்துக்கள் மற்றும் விரிவுரைகளை வழங்குபவர்கள் குறித்தும் விசேடகவனம் செலுத்தப்பட வேண்டுமென தேசிய பாதுகாப்புத் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புத் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றத்தில் கூடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கேந்திர முக்கியத்துவம் நிறைந்ததாக அமைந்துள்ள இலங்கைக்கு கடந்த காலத்திலிருந்து பல்வேறு ஆக்கிரமிப்புக்கள் மற்றும் எதிரிகளின் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கவேண்டி ஏற்பட்டது. இது புதிய தோற்றத்தில் பௌதீக ஆக்கிரமிப்புக்களுக்குப் பதிலாக வெளிநாட்டு உடன்படிக்கைகள் மூலம் மேற்கொள்ளப்படலாம். இவ்வாறான ஒப்பந்தங்கள் தொடர்பில் ஆராய்ந்து தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்பதைக் கண்டறிவது இந்தக் குழுவின் பொறுப்பாகும். அதனால் உத்தேச மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவிருக்கிறது.
மேலும் பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இந்த நாட்டில் மத தீவிரவாதம் செயற்படும் அபாயம் காணப்படுகிறது. மதம் மற்றும் மொழியை மட்டும் போதிக்கும் பதிவு செய்யப்படாத மத்ரஸா பாடசாலைகள் குறித்தும், வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்து தீவிரவாத கருத்துக்கள் மற்றும் விரிவுரைகளை வழங்குபவர்கள் குறித்தும் விசேடகவனம் செலுத்தப்பட வேண்டும்.
இந்தத் தீவிரவாதத்தை தோற்கடிப்பது தொடர்பாக மிக முக்கியமான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை 2015-2019 ஆம் ஆண்டில் செயற்பட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. எதிர்காலத்தில் அவற்றை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறோம் என்றார்.
அத்துடன் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் கலவரங்களை தடுத்து நிறுத்தி நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM