உலக காசநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும், கலந்துரையாடலும்

Published By: Ponmalar

23 Mar, 2023 | 04:54 PM
image

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ. எல். எம். றிபாஸின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக உலக காசநோய் தடுப்பு தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் புதன்கிழமை (22) கல்முனை மாவட்ட மார்பு சிகிச்சை நிலையத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எல்.அப்துல் கபூரினால் விழிப்புணர்வு ஊர்வலமும் காச நோயை ஒழிப்பதற்கான கலந்துரையாடலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் வைத்தியர் ஏ.எச்.எம். மபாஸினால் காச நோய் தொடர்பில் விளக்கக் காட்சி ஒன்றும் நடத்தப்பட்டது.

சம்மாந்துறை கமு/சது/அல்-மர்ஜான் மகளிர் கல்லூரியில் தொடங்கிய குறித்த பேரணி மாவட்ட மார்பு சிகிச்சை நிலையம் வரை பயணித்தது பணிப்பாளர் சார்பில் குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எம்.பீ.ஏ.வாஜித், மலேரியா ஒழிப்பு இயக்கத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.எம்.நௌசாத், சுற்றுச்சூழல் மற்றும் தொழில் வான்மை சுகாதாரப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எஸ்.எம்.பௌசாத், பாலியல் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம். என். எம். தில்ஷான், கல்முனை பிராந்திய ஆயுர்வேத பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ.நபீல், வைத்தியர் டி.ஆர்.எஸ்.டி.எஸ்.ரஜப், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா, உயிரியல் மருத்துவ பொறியியலாளர் என்.எம்.இப்ஹாம், ஏனைய வைத்தியர்களும் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.எம்.கபீர், மேற்பார்வை சுகாதார பரிசோதகர்கள், சுகாதார பரிசோதகர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் பொது சுகாதார மாதுக்கள் ஏனைய சுகாதார உத்தியோகத்தர்கள், சாரதிகள், சிற்றூழியர்கள் என பெருமளவிலான சுகாதார உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலமும் கலந்துரையாடலும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வு

2024-10-05 16:44:16
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2024-10-05 16:11:54
news-image

யாழ். பல்கலையில் “கனலி” மாணவர் சஞ்சிகையின்...

2024-10-04 19:24:53
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா : சர்வமதப்...

2024-10-04 19:12:03
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றத்தின் நவராத்திரி...

2024-10-04 18:59:37
news-image

"நாத வந்தனம்" வீணை இசை நிகழ்வு 

2024-10-04 18:44:18
news-image

கொழும்பு வெள்ளவத்தை ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி...

2024-10-04 18:24:16
news-image

ஊடகக் கற்கைகள் துறையின் கனலி மாணவர்...

2024-10-04 17:07:40
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2024-10-05 13:51:08
news-image

'ஞயம்பட உரை' கலாசார நிகழ்வு கொழும்பில்...

2024-10-04 12:13:43
news-image

கிளிநொச்சி புனித திரேசாள் ஆலய திருவிழா...

2024-10-04 01:57:25
news-image

பெருந்தலைவர் காமராஜரின் 49ஆவது நினைவு தினம்

2024-10-03 18:21:30