குழந்தைகளுக்கு தொடுதல் பற்றி பெற்றோர்கள் தொடர்ந்து எடுத்துரைக்க வேண்டும்

Published By: Ponmalar

23 Mar, 2023 | 04:51 PM
image

'இணைய ஆதிக்கத்தில் இருக்கும் இன்றைய தலைமுறையிடம் குறிப்பாக பெண் பிள்ளைகளிடம் மற்றவர்களின் தொடுதல் பற்றிய சாதக, பாதக விடயங்களை பெற்றோர்கள் தொடர்ந்து அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்' என 'சீதா ராமம்' படப் புகழ் பொலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளில் வெளியாகும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் பொலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர். இவர் கடந்த ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வரவேற்பை பெற்ற 'சீதா ராமம்' எனும் திரைப்படத்தில் கதையின் நாயகியான சீதா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் அவருடைய திரை உலக பயணத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் தனியார் நிகழ்வொன்றில் பங்கு பெற்ற வருகை தந்திருந்தார்.

அப்போது அவரிடம் உங்களுடைய திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய 'சீதா ராமம்' படத்தின் அனுபவங்கள் குறித்து கேட்டபோது, ''திரைத்துறையில் நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கடந்த பிறகு எமக்கு 'சீதா ராமம்' படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இப்படம் வெளியான பிறகு ரசிகர்களிடமிருந்து கிடைத்து வரும் அன்பு இன்றும் தொடர்கிறது. இதனை நான் எதிர்பார்க்கவில்லை. எம்மை பொறுத்தவரை ஒவ்வொரு படத்திலும் நான் ஒரு பகுதியாக இருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் என் இதயத்தையும், ஆன்மாவையும் செலுத்தி நடிக்கிறேன். அப்போதுதான் அது பார்வையாளர்களின் இதயத்தை தொடும் என நம்புகிறேன். சீதா ராமம் படத்திலும் சீதா எனும் கதாபாத்திரத்திடமிருந்த அப்பாவித்தனமும், உறுதியும் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. உண்மையில் ராமர் இல்லாமல் சீதை சீதையாக இருக்க மாட்டாள். எனவே நல்ல ராமராக நடிகர் துல்கர் சல்மான் நடிப்பும் இருந்தது. இந்த தருணத்தில் அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சீதா ராமம் படம் வெளியாகி ஏழு மாதங்களைக் கடந்த பிறகும் இன்றும் எமக்கு ரசிகர்களிடமிருந்து கடிதங்கள், மின்னஞ்சல்கள் வந்து கொண்டே இருக்கிறது.

இன்றைய இளைய சமுதாயத்தினரிடம் பகிர்ந்து கொள்ள விரும்பும் விடயம் குறித்து கேட்டபோது, “கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் எம்முடைய பிள்ளைகள் ஒன்லைன் வழியாக கல்வியை கற்கத் தொடங்கினர். தற்போது இந்த ஒன்லைன் கல்வியை பலரும் தொடர்கின்றனர். ஒன்லைனில் கல்வி கற்கும் போது வளரிளம் பருவத்தில் இருக்கும் சிறார்கள் மற்றும் சிறுமிகளுக்கு கவனச்சிதறல் ஏற்படுவது இயல்பு. அதனால் பெற்றோர்கள் அவர்களையும் அவதானித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இணையம் ஆபத்தானது. அதன் மறுபுறம் யார் இருக்கிறார்கள் என்பது எமக்குத் தெரியாது.

மேலும் முதலில் நாம் நம் பிள்ளைகளை நம்ப வேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிள்ளைகள் தங்களது பயத்தையோ அல்லது அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு விடயத்தை பகிர்ந்து கொள்ள உங்களிடம் வருகை தந்தால்... அவர்கள் சொல்வதை முதலில் முழுமையாக நம்ப வேண்டும். எம்மை பொறுத்தவரை ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் குட் டச் பேட் டச் எனப்படும் தொடுதலை பற்றிய முழுமையான பாடத்தை கற்பிக்க வேண்டும். குழந்தைகள் சமூக வலைதள பக்கத்தில் அதிகம் ஈடுபடுகிறார்கள். இதனை தடுத்திட இயலாது. ஆனால் தவறான பாதையில் பயணிப்பதை கண்காணித்து, ஆரோக்கியமான பாதையில் திசை திருப்ப இயலும்.

இந்த சமூகம் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதற்கான பாதுகாப்பு மிக்க சமூகமாக மாற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன். இதற்கு பிள்ளைகளிடத்தில் தொடுதலை பற்றிய நேர்நிலையான தாக்கத்தை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும். அதன் பிறகு பிள்ளைகள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவர்களை பற்றிய விடயங்களை பெற்றோர்களிடமோ அல்லது காவல் துறையினரிடமோ தெரிவிப்பதற்கு தயக்கம் காட்ட மாட்டார்கள்.

நேரடி தமிழ் படங்களில் நடிப்பதற்கான சூழல் குறித்து கேட்டபோது, “தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கு பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். மேலும் நல்லதொரு திரைக்கதைக்காகவும், அழுத்தமான கதாபாத்திரத்திற்காகவும் பொறுமையுடன் காத்திருக்கிறேன்.” என்றார் நடிகை மிருணாள் தாக்கூர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூஜையுடன் தொடங்கிய பிரபு தேவாவின் 'பேட்ட...

2023-06-02 10:57:34
news-image

சமுத்திரகனி நடிக்கும் 'விமானம்' பட முன்னோட்டம்...

2023-06-02 10:43:53
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படப்பிடிப்பு...

2023-06-02 10:44:21
news-image

உதயநிதி ஸ்டாலினின் 'மாமன்னன்' ஒடியோ வெளியீடு

2023-06-02 10:43:16
news-image

எஸ்.ஜே. சூர்யாவின் 'பொம்மை' திரைப்படத்தின் வெளியீட்டு...

2023-06-02 10:46:49
news-image

ரேகா நடிக்கும் 'மிரியம்மா' பட தொடக்க...

2023-06-02 09:55:25
news-image

'எறும்பு' திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு

2023-06-01 17:02:25
news-image

'டக்கர்' அதிவேகமான திரைக்கதை - நடிகர்...

2023-06-01 14:05:31
news-image

இளைய தலைமுறையினரைக் கவருமா சித்தார்த்தின் ‘டக்கர்’..?

2023-06-01 12:03:24
news-image

சுனைனா நடிக்கும் 'ரெஜினா' பட டீசர்...

2023-06-01 11:31:49
news-image

ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட ‘போர் தொழில்’படத்தின் முன்னோட்டம்

2023-05-31 14:32:35
news-image

நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கும் 'பெல்'

2023-05-31 10:47:00