logo

நெருக்கடி நிலையில் அரசாங்கத்திடம் இல்லாத வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும்

Published By: Nanthini

23 Mar, 2023 | 04:31 PM
image

லங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள வெரிட்டே ரிசேர்ச்  குழுவானது நெருக்கடியான சூழலிலும் அரசானது வெளிப்படைத் தன்மையின்றியும் பொறுப்புக்கூறல் இன்றியும் செயற்படுவதாக கருத்து தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையின் பின்னணியில் 2022ஆம் ஆண்டில் அரசாங்கம் முன்மொழிந்த கொள்கைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை வெரிட்டே ரிசேர்ச் ஆய்வின் மூலம் மதிப்பிட்டுள்ளது. 

அதன்படி,

1) சுகாதாரம் மற்றும் மருத்துவம் 

2) உணவு மற்றும் விவசாயம் 

3) எரிபொருள் மற்றும் ஆற்றல்

ஆகிய மூன்று முக்கிய பகுதிகளில் பாராளுமன்ற உறுப்பினர்களால் பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 15 அமைச்சரவை தீர்மானங்கள் மற்றும் முன்மொழிவுகளை அரசாங்கம் பின்பற்றியுள்ளதா என்பதை வெரிட்டே மதிப்பிட்டது.

இலங்கையின் தனிநபர் வருமான வரிக் கொள்கையில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட திருத்தங்கள் பொதுமக்களின் விமர்சனத்துக்குள்ளாயின. 

வரி செலுத்துநர்களின் பணத்தை அரசாங்கம் சரியான முறையில் பயன்படுத்தாது என்ற அவநம்பிக்கையின் அடிப்படையில் இது ஏற்பட்டது. 

முன்மொழியப்பட்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பான தகவல்களை அரசாங்கம் வெளியிட மறுத்ததில் இந்த அவநம்பிக்கை மேலும் வலுப்பெற்றுள்ளது. அவ்வாறான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்காமல் இருப்பது கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம், அரச நிதிகளை முறைகேடாக பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.

கொள்கை நடைமுறைப்படுத்தல் தொடர்பான தகவல்களை பகிர்வதற்கு அரசாங்கம் தயங்குகிறது.

பொதுமக்களின் வசதிக்காக செயற்படுவது அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களினது முக்கிய கடமை எனவும், அனைத்து அமைச்சுக்களிலும் அரச நிறுவனங்களிலும் திறன் வாய்ந்த பதிலளிக்கும் அமைப்பை உருவாக்குவது அவசியம் எனவும் 2022 செப்டெம்பரில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அறிவித்திருந்தார். 

இருப்பினும், வெரிட்டேயின் மதிப்பீடுகள், அரசாங்க நிறுவனங்கள் தாம் பெறும் தகவல் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கு பெரும்பாலும் தயாராக இருப்பதில்லை என்பதை கண்டறிந்தன.

15 முன்மொழிவுகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு 9 முகவரகங்கள் பொறுப்பாக உள்ளன. இந்த மதிப்பீடு பின்வருவனவற்றை வெளிப்படுத்தியுள்ளது:

* இந்த முன்மொழிவுகளின் முன்னேற்றம் தொடர்பான தகவல்களை எந்தவொரு முகவரகமும் தாமாக முன்வந்து ஒன்லைனில் வெளியிடவில்லை. 

(2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல்கள் உரிமைச் சட்டத்தின் 8(2)(b)(v) பிரிவின் கீழ் தாமாக முன்வந்து தகவல்களை வெளிப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களின் கீழ் கோரப்பட்ட தகவல்கள் இருந்தாலும் கூட)

* தகவல் அறியும் உரிமை கோரிக்கைகளுக்கு 3 முகவரகங்கள் மாத்திரமே பதிலளித்திருந்தன.

* முன்மொழிவுகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு ஒரு முகவரகம் வழங்கிய தகவல் மாத்திரமே போதுமானதாக இருந்தது.

யார் பொறுப்பு?

இதில் பொறுப்புக்கூறல் இன்மை ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது.

அமைச்சரவை தீர்மானம் அல்லது முன்மொழிவில் நடைமுறைப்படுத்தும் முகவரகமாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் கூட பல அமைச்சுக்களும் திணைக்களங்களும் முன்மொழிவுகள் தங்கள் மேற்பார்வையின் கீழ் வருகின்றனவா என்பதில் தெளிவில்லாமல் இருப்பதை மதிப்பீடு வெளிப்படுத்தியுள்ளது. 

தகவல் அறியும் உரிமைக் கோரிக்கைகள் பல தடவைகள் முகவரகங்களுக்கும் தகவல் அலுவலர்களுக்கும் இடையே மாற்றி மாற்றி அனுப்பப்பட்டன.

இலங்கையில் நெருக்கடியின்போதும் அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானத்தில் பொறுப்புக்கூறல் இன்மை முக்கியமானதும் தொடர்ச்சியான ஓர் அம்சமாகவும் உள்ளது. 

அரசாங்கத்திடமிருந்து கூடுதலான பொறுப்புக்கூறலும் வெளிப்படைத்தன்மையும் வேண்டும் என்பதே இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களின் முக்கிய கோரிக்கைகளாக இருந்தன.

நெருக்கடி, பொதுமக்களின் அல்லல்கள், பொதுமக்களின் கோரிக்கைகள் ஆகியவற்றின் போதும் அரசாங்கம் மாறுவதற்கு விருப்பமின்றி இருப்பது, நிலையான பொருளாதார மீட்சிக்கான வாய்ப்பு இருட்டாக இருப்பதை காட்டுகிறது.

2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களிடம் கோரப்பட்ட தகவல்களிலேயே இந்த மதிப்பீடு முதன்மையாக தங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒளி மற்றும் ஒலி பரப்பு சட்டமூலம்...

2023-06-10 20:20:30
news-image

யாழில் தனியார் கல்வி நிலையங்கள் சங்கமொன்றை...

2023-06-10 20:17:48
news-image

யாழில் 'சுயமரியாதை நடைபவனி' முன்னெடுப்பு

2023-06-10 20:16:58
news-image

வீடொன்றினுள் புகுந்து நகை, பணம், கையடக்கத்தொலைபேசியை...

2023-06-10 20:15:20
news-image

மாங்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் காட்டு...

2023-06-10 19:56:20
news-image

பிள்ளைகளின் போதைப்பொருள் பாவனைக்கு பெற்றோரின் கவனயீனமும்...

2023-06-10 19:53:28
news-image

மொபைல் போன் பாவனையாளர்களுக்கு ஒரு இனிப்பான...

2023-06-10 17:45:01
news-image

பதுரலிய, மத்துகம வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

2023-06-10 17:04:49
news-image

சமூக அரசியல் செயற்பாட்டாளர் பிரசாத்வெலிக்கும்புரவை சிஐடியினர்...

2023-06-10 16:51:18
news-image

ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய...

2023-06-10 15:22:50
news-image

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள்...

2023-06-10 15:02:42
news-image

வெளியக சுயநிர்ணயம் கோரும் நிலை ஏற்படும்...

2023-06-10 16:14:27