சமூர்த்தி சௌபாக்கியா ரன் விமன திட்டத்தின் கீழ் வீடு கையளித்தல் நிகழ்வு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள செம்மன் ஓடை மற்றும் வாழைச்சேனை கிராம அலுவலர் பிரிவிலுள்ள இரு பயனாளிகளுக்கு வைபவ ரீதியாக இன்று கையளிக்கப்பட்டது.
வழங்கப்பட்ட ஒவ்வொரு வீடும் தலா 12 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா மக்கள் பங்களிப்புடன் 19 இலட்சம் ரூபா மொத்த பெறுமதி கொண்டதாகும். 6 இலட்சத்து 50 ஆயிரம் திணைக்கள நிதியாகும். இதற்கான நிதி அனுசரணையை சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களம் வழங்கியிருந்தது.
நிகழ்வில் மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசமில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ரமிசா ஆகியோர்கள் பிரதம அதிதியாகவும் மாவட்ட கணக்காளர் எம்.எஸ்.பசிர், மாவட்ட சமூக அபிவிருத்தி முகாமையாளர் என்.புவிதரன் ஆகியோர்கள் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்;.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமூர்த்தி தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பசிர் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எல்.ஏ.மஜீத், திட்ட முகாமையாளர் ஏ.எல்.சரிவ், வலய வங்கி முகாமையாளர் எஸ்.ரவிச்சந்திரன், சமூக அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் ஏ.எல்..ஜயுப்கான் மற்றும் பிரிவு உத்தியோகஸ்த்தர்களும் ஆகியோர்களும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM