வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு

Published By: Ponmalar

23 Mar, 2023 | 04:36 PM
image

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால் வறிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் முகமாக  சமூர்த்தி சிசு பல -2023 ஆம் ஆண்டிற்கான நிகழ்ச்சி திட்டமாக வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இவ் விசேட நிகழ்வானது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசமில் தலைமையில் மாவடிச்சேனை அல் இக்பால் பாடசாலையில் நடைபெற்றது.

பிரதேச செயலக நிர்வாகத்தில் உள்ள 118 சமூர்த்தி சமூதாய அமைப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 450 மாணவர்களுக்கு 2000 ரூபா பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது.

 நிகழ்வில் மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் பிரதம அதிதியாக கலநது கொண்டார். உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ரமிசா மாவட்ட கணக்காளர் எம்.எஸ்.பசிர்,மாவட்ட சமூக அபிவிருத்தி முகாமையாளர் என்.புவிதரன் ஆகியோர்கள் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்;.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமூர்த்தி தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பசிர் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எல்.ஏ.மஜீத்,திட்ட முகாமையாளர் ஏ.எல்.சரிவ்,வலய வங்கி முகாமையாளர் எஸ்.ரவிச்சந்திரன், சமூக அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் ஏ.எல்.ஜயுப்கான் சமுதாய அடிப்படை அமைப்பின் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் ரி.ருகுனிதா பாடசாலை அதிபர் எம்.ஜயுப்கான் மற்றும் பிரிவு உத்தியோகஸ்த்தர்களும்  அதிதிகளாக கலந்து கொண்டனர்

இதன்போது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினை காரணமாக மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படா வண்ணம் கல்வியை தொடர்ந்து கற்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கும் முகமாக   இவ் உதவி திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இங்கு உரையாற்றிய அதிகள் கருத்து தெரிவித்தனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right