'சூர்யா'வுக்கான வர்த்தக நாமத் தூதுவராக இலங்கை திரை நட்சத்திரம் யசோதா நியமிப்பு

Published By: Nanthini

23 Mar, 2023 | 03:05 PM
image

பிரபல வர்த்தக நாமமான 'சூர்யா'வை உற்பத்தி செய்யும் சன் மட்ச் நிறுவனம் கடந்த 40 வருடங்களாக மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளது. 

தற்போது அதன் வர்த்தக நாமத் தூதுவராக இலங்கையின் பிரபல நடிகை யசோதா விமலதர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையானது இந்த வர்த்தக நாமத்தின் பிரசனத்தை விரிவாக்குவதும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுமாகும். 

சினிமா துறையில் யசோதாவுக்கு இருக்கும் பெயரும் புகழும் நல்லெண்ணமும் இதனை ஊக்குவிக்க உதவுவதுடன், வர்த்தக நாமத்தை வளர்த்தெடுக்கவும், வாடிக்கையாளருடனான உறவை வலுப்படுத்தவும், 40 ஆண்டுகளாக நிறுவனம் கட்டியெழுப்பிய நம்பிக்கையையும் விசுவாசத்தையும் மீள நிறுவவும் உதவும்.

சந்தையில் மரத்தாலான தீக்குச்சிகள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் தொழில் முனைவாளர் டி.ஆர்.ராஜனால் மெழுகினாலான தீக்குச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

தற்போது தமது முற்று முழுதான தானியங்கும் விற்பனை மற்றும் விநியோக வலையமைப்பின் மூலம் சந்தையில் முன்னணி வர்த்தக நாமமாக 'சூர்யா' உள்ளது. 

இந்த வர்த்தக நாமமானது 14 தனித்துவமான வாசனைகளைக் கொண்ட ஊதுபத்தி வரிசையை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன் ஒவ்வொரு வீட்டையும் ஒளிரச் செய்வதில் நாம் அக்கறையோடு இருக்கும் அதேவேளை எமது மெழுகு சிந்தாத மெழுகுவர்த்திகள் பல சாதனைகளைச் செய்யும். 

“யசோதா, பாரம்பரிய மற்றும் தற்கால அழகின் கலவையாக விளங்குகிறார். இவர் எங்கள் வர்த்தக நாமத்தை பிரதிநிதித்துவப்படுத்த பொருத்தமானவராக இருப்பார்” என்று நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் நிறுவுனரின் மகளுமான கெளரி ராஜன் தெரிவித்துள்ளார். 

விருது வென்ற திரைப்பட நடிகையான யசோதா, களணி பல்கலைக்கழகத்தின் ஹிந்தி பாட பட்டதாரியும், லக்னோ பல்கலைக்கழகத்தில் இருந்து முதுமாணி பட்டம் பெற்றவரும் ஆவார். 

கடந்த வாரம் இந்தியாவில் நடைபெற்ற ஆசிய பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் பங்குபற்றிவிட்டு திரும்பிய யசோதா தனது புதிய பங்குடமை பற்றி பேசினார். 

“சூர்யா பத்திகள் எனது வாழ்வுடன் ஆழமாக பின்னிப் பிணைந்திருக்கிறது. நம்பிக்கை, பெறுமதி என்பனவற்றை எனது வாழ்வுக்கு வழங்கியிருக்கிறது. சூர்யா வர்த்தக நாமத்துடன் கைகோர்த்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.

நான் எப்போதும் என் ஆன்மாவுக்கும் உள நம்பிக்கைகளுக்கும் உண்மையாக இருக்கவேண்டும் என்று விரும்புவேன். எனது கோட்பாடுகளை ஒத்திருக்கும் வர்த்தக நாமத்துடன் இணைவதில் மகிழ்ச்சி. அதனை ஊக்குவிக்க பாடுபடுவேன்" என்றார்.

யசோதாவுக்கும் சன் மட்ச் கம்பனியின் நிறைவேற்று தலைவரான சூரி ராஜனுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்தானது. இது பிரபல வர்த்தக நாமத்துக்கும் பிரபல நடிகைக்கும் இடையிலான பங்குடமையின் ஆரம்பத்தை குறிக்கிறது. 

இது நிறுவனத்தின் ஒரு மைல்கல் நடவடிக்கை ஆகும்.

விளம்பரங்கள் உள்ளடங்கலாக சூர்யாவின் பல்வேறுபட்ட நடவடிக்கைகளில் யசோதா இணைந்திருப்பார். யசோதாவுக்கு இலங்கை மக்களிடையே உள்ள பெரும் வரவேற்பு சூர்யாவுக்கு ஒரு சாதகத்தன்மையை ஏற்படுத்தும். 

இந்த பங்குடமையானது இரு தரப்பிலும் சந்தையில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும். அத்துடன் அதன் பயணத்தையும் சிறப்பானதாக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57