(நெவில் அன்தனி)
இங்கிலாந்தின் பிரபல கால்பந்தாட்டக் கழகங்களில் ஒன்றான மென்செஸ்டர் யுனைட்டட் கழகத்தின் உரிமைத்துவத்தைப் பெறுவதற்கு இரண்டு தரப்பினருக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
கத்தார் வங்கியாளர் ஷெய்க் ஜசிம் பின் ஹமாத் அல் தானி மற்றும் பிரித்தானிய கோடீஸ்வரர் ஜிம் ரெட்கிளிவ் ஆகிய இருவரும் ஏல விலையை 20 மடங்கால் அதிகரிக்க தயாராக இருப்பதால் மென்செஸ்டர் யுனைடெட்டை வாங்குவதற்கான போட்டி சூடுபிடித்துள்ளது.
மென்செஸ்டர் யுனைட்டட் கழகத்தை ஏலத்தில் எடுப்பதற்கான காலத்தை ரெய்ன் வங்கி நீடித்துள்ளது. இந்தக் கழகத்தை விற்பனை செய்வதில் உதவியாளராக ரெய்ன் வங்கி செயற்படும் நிலையில் மென்செஸ்டர் யுனைட்டட் கழகத்தை வாங்கத் துடிக்கும் இரண்டு தரப்பினரும் தங்களது ஆரம்ப விலைகளை பன்மடங்கு அதிரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
ஷெய்க் ஜசிம் மற்றும் ரெட்க்ளிவ் ஆகிய இருவருக்கும் புதிய விலைகளை சமர்ப்பிப்பதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிய கிடைக்கிறது என ஸ்கை ஸ்போர்ட்ஸ் செய்தி ஒன்று கூறுகிறது.
எனினும் புதிய விலைகளுடனான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான புதிய காலக்கெடு எதுவும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை.
மென்செஸ்டர் கழகத்தின் பெறுமதி 6 பில்லியன் யூரோக்கள் என அக் கழகத்தின் தற்போதைய உரிமையாளர்களான க்ளேஸர் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்
கழகத்தின் 100 சதவீத கட்டுப்பாட்டிற்கான ஷெய்க் ஜசிமின் முயற்சியானது, யுனைடெட்டின் 620 மில்லியன் டொலர் கடனைத் தீர்த்து, புதிய மைதானம் மற்றும் பயிற்சி மைதானம் ஆகியவற்றில் முதலீடு செய்வதாகவும், ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் அமைகிறது.
சிறுபராயத்திலிருந்தே யுனைட்டட் கழகத்தின் இரசிகரான INEOS இரசாயன நிறுவனத்தின் ஸ்தாபகர் ரெட்க்ளிவ், தனது மதிப்பீட்டில் மிகவும் கவனமாக நிதானத்தைக் கடைப்பிடித்து வருகிறார்.
கால்பந்தாட்டத்தின் மிகச்சிறந்த கழகங்களில் ஒன்றுக்கான ஏலப் போட்டியில் 'முட்டாள்தனமான' விலையை கொடுக்க மாட்டேன் என்று வலியுறுத்தினார்.
'சில விடயங்களுக்கு முட்டாள்தனமான விலைகளை செலுத்தி விட்டு பின்னர் வருத்தப்பட நேரிடும்' என ரெட்கிளிவ் குறிப்பிட்டுள்ளார்.
மென்செஸ்டர் கழகத்திற்கான ஏல விலை மற்றைய ஏல விலையை விட அதிகமாக இருந்தால், அது பிரத்தியேக காலத்திற்குள் நுழையத் தேர்ந்தெடுக்கப்படலாம். எனினும் விற்பனை தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னர் மேலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM