மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி மற்றும் ஜோதிகா இணைந்து நடித்திருக்கும் 'காதல் - தி கோர்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு திரைப்படங்களில் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களையும் கதைகளையும் தெரிவுசெய்து நடித்து வருகிறார் ஜோதிகா.
அவர் தற்போது தமிழில் மட்டுமல்லாமல், மலையாள திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியிருக்கிறார்.
மலையாளத்தில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஜோ பேபி இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'காதல் - தி கோர்' எனும் திரைப்படத்தில் மம்மூட்டி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருக்கிறார்.
சலீம் கே. தோமஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு மேத்யூஸ் புலிக்கன் இசையமைத்திருக்கிறார். மத்திம வயதினரின் காதலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை மம்மூட்டி கம்பனி எனும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் மம்மூட்டியே தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி இந்த திரைப்படம் மலையாளம் மற்றும் தமிழில் வெளியாகிறது.
கடந்த ஆண்டில் ஜோதிகா நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. இவர் நடிப்பில் 50ஆவது திரைப்படமாக உருவான 'உடன் பிறப்பே' எனும் படத்துக்கு பிறகு 51ஆவது படமாக 'காதல் - தி கோர்' எனும் மலையாள படம் வெளியாகிறது.
இதனிடையே ஜோதிகா தனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு சென்னையிலிருந்து மும்பைக்கு இடமாற்றம் செய்திருப்பதாகவும், இனி அவர் தொடர்ந்து மும்பையிலேயே வசிக்கவிருப்பதாகவும் ஒரு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மற்றொரு பிரிவினர் அவர் தற்போது 'ஸ்ரீ' எனும் ஹிந்தி மொழியில் தயாராகும் இணைய தொடரில் நடிப்பதற்காக மும்பையில் தங்கி படப்பிடிப்பில் பங்குபற்றி வருகிறார் என்றும், அவர் சென்னையிலிருந்து நிரந்தரமாக மும்பைக்கு குடிபெயரவில்லை என்றும் கூறி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM