சமாதானம், நல்லிணக்கத்திற்கான வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முழுமையான ஆதரவு தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷா உறுதி

Published By: Vishnu

23 Mar, 2023 | 03:59 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்காக தென் ஆபிரிக்க அரசாங்கத்தின் அதிகபட்ச ஒத்துழைப்பினைப் வழங்குவதாக அந்நாட்டு ஜனாதிபதி சிறில் ரமபோஷா உறுதியளித்துள்ளார்.

நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்காக தென் ஆபிரிக்க அரசாங்கத்தின் அனுபவம் மற்றும் உத்திகள் குறித்து அறிந்து கொள்ளும் நோக்கில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் தென் ஆபிரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இவ்விஜயத்தின் போது 22 ஆம் திகதி புதன்கிழமை தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷாவை சந்தித்து கலந்துரையாடிய போதே அவரால் இவ்வாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கை பிரதிநிதிகள் முன்னிலையில் உரையாற்றிய தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷா , சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் தற்போது முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் ஊடாக  இலங்கை அரசாங்கத்தின் இலக்குகளை அடைவதற்காக தென்னாபிரிக்க சமாதான வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் தலைமைத்துவத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட நீண்ட சமாதான வேலைத்திட்டங்கள் இலங்கையின் சமாதான வேலைத்திட்டங்களை வெற்றியடையச் செய்வதற்காக அதிகபட்ச ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே வேளை தென் ஆபிரிக்காவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் நாலேடி பண்டர் மற்றும் இலங்கை அமைச்சர்களுக்கிடையில் பிரிதொரு சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.

மேலும் மறைந்த ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் ஆட்சி காலத்தில் அரசியலமைப்பு தொடர்பான அமைச்சராக பதவி வகித்த ரோல்ஃப் மேயருடன் இடம்பெற்ற சந்திப்பில், தென் ஆபிரிக்க பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36