கன்னட திரையுலகத்தின் முன்னணி நடிகரும், பான் இந்திய நட்சத்திரமுமான துருவா சர்ஜா கதையின் நாயகனாக நடிக்கும் 'கே.டி. தி டெவில்' எனும் திரைப்படத்தில் இடம்பெறும் வலிமை வாய்ந்த சத்தியவதி எனும் கதாபாத்திரத்தில் நடிக்க பொலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி குந்த்ரா ஒப்பந்தமாகியிருப்பதாக படக்குழுவினர் பிரத்தியேக புகைப்படத்தை வெளியிட்டு உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநரான பிரேம் இயக்கத்தில் தயாராகும் புதிய பான் இந்திய திரைப்படம் 'கே.டி தி டெவில்'.
இந்தத் திரைப்படத்தில் துருவா சர்ஜா, ரவிச்சந்திரன், பொலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் தற்போது பொலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி குந்தராவும் இணைந்திருக்கிறார்.
வில்லியம் டேவிட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு அர்ஜுன் ஜென்யா இசையமைத்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய இந்திய மொழிகளில் பிரம்மாண்டமான பட்ஜட்டில் தயாராகும் இந்த திரைப்படத்தை கே.வி.என் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் பட வாய்ப்பு பற்றி நடிகை ஷில்பா ஷெட்டி பேசுகையில்,
''இயக்குநர் பிரேம் என்னை சந்தித்து 1970ஆம் ஆண்டுகளில் பெங்களூருவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவிய கதை என 'கே. டி. தி டெவில்' படத்தின் திரைக்கதையை விவரித்தார். இதில் சக்தி வாய்ந்த சத்தியவதி எனும் கதாபாத்திரம் பற்றி கூறிவிட்டு, 'அதில் உங்களால் நடிக்க இயலுமா?' என கேட்டார்.
இராஜ்ஜியங்களுக்கு இடையே நடைபெறும் மாபெரும் போரை பற்றிய கதை என்பதாலும், இதில் சத்தியவதி எனும் கதாபாத்திரம் ஆற்றல் வாய்ந்தது என்பதாலும் நடிக்க உடனடியாக ஒப்புக்கொண்டேன்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM