இலங்கையில் பூச்சிகள் நிர்வகிப்புத்துறையில் முன்னோடியாக அமைந்துள்ள Suren Cooke Agencies, Sri Lanka Sub-Aqua Club (SLSAC) மற்றும் Neptune's Army of Rubbish Cleaners (NARC)உடன் இணைந்து கல்கிசை கடல் பகுதியை சுத்திகரிக்கும் பணியை அண்மையில் முன்னெடுத்திருந்தது.
வினைத்திறனான கடல் சுத்திகரிப்பு பணியை முன்னெடுப்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திட்டம் அமைந்திருந்ததுடன், தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி, பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையைச் சேர்ந்த சமூகங்களுக்கு வலுவூட்டுவதை அடிப்படையாகக் கொண்டும், நிறுவனத்தின் நீண்ட கால சூழலுக்கு நட்பான நோக்கத்துக்கு பங்களிப்பு வழங்குவதையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.
பாரம்பரிய சுத்திகரிப்பு பணிகளுக்கு ஒருபடி அப்பால் சென்று, கடற்படுகையில் காணப்படும் கழிவுகளை சேகரிக்கும் திட்டத்தில் சுழியோடிகள் பங்கேற்றிருந்தனர்.
களத்திலிருந்த அணியின் பங்களிப்புடன், மொத்தமாக பல்வேறு கப்பல் இடிபாடுகளில் சிக்கியிருந்த 180 கிலோகிராம் மீன்பிடி வலைகளை மீட்டிருந்தனர்.
கடலில் இந்தக் கழிவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த கடல்வாழ் உயிரினங்களுக்கு விடுவிப்பை ஏற்படுத்தியிருந்தமைக்கு மேலதிகமாக, நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான பொதியிடல் மூலப்பொருளில் பயன்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அப்பிரதேசத்தைச் சேர்ந்த மீன்பிடியாளர்களுடன் இணைந்து பணியாற்றி, கரையோரப் பகுதியில் காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதில் Suren Cooke Agencies கவனம் செலுத்தவுள்ளது.
அத்துடன், சந்தையில் நிலவும் சராசரி பெறுமதியை விட உயர் விலையில் அவர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படும். அவ்வாறான ஊக்குவிப்புகளினூடாக இந்த பரஸ்பர அனுகூலமளிக்கும் திட்டத்தினூடாக சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தாக்கம் நிலவும்.
இந்தத் திட்டம் தொடர்பில் Suren Cooke Agenciesஇன் பணிப்பாளர் ஷெரான் கூக் கருத்து தெரிவிக்கையில்,
நீண்ட காலம் நிலைத்திருக்கும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு, இந்த தூய்மையாக்கல் பணியை முன்னெடுக்க திட்டமிட்டிருந்த போது, வழமைக்கு அப்பால் சென்று செயலாற்ற வேண்டியமையை உணர்ந்திருந்தோம்.
கடற்படுகையிலிருந்து கழிவை சேகரித்திருந்த சுழியோடிகள் முதல் எமது பெறுமதி வாய்ந்த வெளிநாட்டு பங்காளர் நிறுவனங்கள் வரையில் இலங்கையின் பெறுமதி வாய்ந்த கரையோரங்களை பாதுகாப்பதற்கு இவ்வாறான முயற்சிகள் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
சூழலுக்கு நட்பாக திகழும் எமது நோக்கத்துக்கு பங்களிப்பு வழங்குவதாக இவ்வாறான திட்டங்கள் உள்ளதுடன், எமது பணிகள் சூழலுக்கு உயர் பயனை பெற்றுக் கொடுப்பதாகவும் அமைந்திருக்கும் என்றார்.
எதிர்கால தலைமுறையினருக்கு தூய்மையான மற்றும் பாதுகாப்பான இலங்கையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு Suren Cooke Agencies எதிர்பார்க்கிறது.
நிறுவனத்தின் நீண்ட கால நிகழ்ச்சி நிரலானது, Earthly Warrior Awards மற்றும் Save Our Seas நிகழ்ச்சிகளினூடாக ஏனைய சூழல் பாதுகாப்பு பணிகளுக்கு ஆதரவளிக்கிறது. இந்த நிகழ்ச்சிகள், உள்நாட்டு வியாபாரங்கள் பிளாஸ்டிக் பொருட்களில் தங்கியிருப்பதை குறைப்பதற்கு உதவும்.
பொது மக்கள் மற்றும் சமூகங்களுக்கு தமது பணி மற்றும் பசுமையான இலங்கையை உருவாக்க எவ்வாறு பங்களிப்பு வழங்கலாம் என்பது தொடர்பில் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள், நிலைபேறாண்மைக்கான அவர்களின் அர்ப்பணிப்பை உறுதி செய்வதாக அமைந்துள்ளன. அவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பதனூடாக Suren Cooke Agenciesஇனால் எதிர்கால தலைமுறையினருக்கு பசுமையான புவியை விட்டுச் செல்லும் நோக்கத்துக்கு பங்களிப்பு வழங்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM