3D அச்சிடல் முறையில் உருவாக்கப்பட்ட முதல் ரொக்கெட் விண்வெளிக்கு ஏவப்பட்டது

Published By: Sethu

23 Mar, 2023 | 10:46 AM
image

முப்பரிமாண அச்சிடல் (3D printing) முறையில் உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது ரொக்கெட் இன்று வெற்றிகரமாக விண்வெளிக்கு ஏவப்பட்டது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள கேப் கனாவெரல் நகரிலிருந்து இந்த ரொக்கெட் ஏவப்பட்டது.

கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ரிலேட்டிவிட்டி ஸ்பேஸ்  எனும் தனியார் நிறுவனத்தினால் இந்த ரொக்கெட் தயாரிக்கப்பட்டது. 'டெரென் 1' (Terran 1) என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.

மார்ச் 8 ஆம் திகதி டெரென் 1 ரொக்கெட்டை ஏவுவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் கடந்த 11 ஆம் திகதிக்கு அது ஒத்திவைக்ப்பட்டது. எனினும் அத்திட்டமும் ஒத்திவைக்கப்பட்டது,

இந்நிலையில், உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு  இலங்கை, இந்திய நேரப்படி இன்று வியாழன் காலை இந்த ரொக்கெட் விண்வெளிக்கு வெற்றிகராக ஏவப்பட்டுள்ளது.

முப்பரிமாண அச்சிடல் முறையில் உருவாக்கப்பட்ட ரொக்கெட் விண்வெளியை நோக்கிய க‍டுமையான ஏவுகை செயற்பாடுகளுக்குத் தாக்குப்பிடிக்குமா என ஆராய்வதற்காக இந்த ரொக்கெட் விண்வெளிக்கு ஏவப்பட்டது.

எனினும் வெற்றிகரமாக எவப்பட்ட போதிலும் இந்த ரொக்கெட் சுற்றுப்பாதையை அடையத் தவறியதாக அறிவிக்கப்பபட்டுள்ளது.

110 அடி (33.5 மீற்றர்) நீளமான இந்த ரொக்கெட் 7.5  (2.2 மீற்றர் விட்டமுடையதாகும். இந்த ரொக்கெட்டின் இயந்திரங்கள் உட்பட 85 சதவீதமான பாகங்கள் கலப்பு உலோகங்கள் மூலம் முப்பரிமாண அச்சிடல் முறையில் உருவாக்கப்பட்டவையாகும். 

உலகில் இதுவரை முப்பரிமாண அச்சிடல் முறையில் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய பொருள் இதுவாகும் என ரிலேட்டிவிட்டி ஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10