அரச கரும மொழிகள் திணைக்களத்தின் வழிகாட்டலுக்கு அமைய நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் இடம் பெற்று வரும் இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியை தொடரும் பயிலுனர்கள் ஏற்பாடு செய்த பல் சமூக, சமய கலாச்சார பண்பாடுகளை வெளிக்கொண்டுவரும் உணவு பழக்க வழக்கங்களை பரிமாறிக் கொள்ளும் கலாசார நல்லிணக்க நிகழ்வு பிரதான வளவாளர் ஏ.எச்.நாஸிக் அஹமத் தலைமையில் (22) நடைபெற்றது,
நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் பி.பிரணவரூபன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி திலகராணி கிருபைராஜா, கணக்காளர் கே. றிஸ்வி யஹ்சர், நிருவாக உத்தியோகத்தர் கே யோகேஸ்வரன், உட்பட கிராம நிர்வாக உத்தியேகத்தர், மாவட்ட மேலதிக பதிவாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது உரையாற்றிய பிரதேச செயலாளர், அரச சேவையாளர்கள் இரண்டாம் மொழி தேவைப்பாட்டை தமது சேவை காலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும் என்று இருந்தாலும், பல்லின மக்கள் வாழுகின்ற நமது தாய் நாட்டில் ஏனைய சகோதர மக்களின் மொழியை அறிந்திருந்தால் மாத்திரமே அவர்களது சமய, பண்பாட்டு, கலாசார விழுமியங்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.
தமிழ் மொழியை பேசும் அலுவலகங்களில் சிங்கள மொழியை பிரதானமான மொழியாக பேசும் உத்தியோகத்தர்கள் கடமையில் இருப்பதும் சிங்கள மொழி பேசுகின்ற அலுவலகங்களில் தமிழ் மொழியை பேசுகின்ற அலுவலர்கள் கடமைக்குச் செல்வதாலும் நமது மொழி அறிவை நாம் இன்னும் அதிகரித்துக் கொள்ள முடியும். இங்கு இருக்கின்ற பயிலுனர்களான நீங்கள் தேவைப்பாட்டுக்காக மொழியை கற்றுக் கொள்ளாமல் விருப்பத்தோடு மொழியை பேச வேண்டும் என்ற எண்ணத்தோடு முழு கவனத்தையும் செலுத்தி கற்றுக் கொண்டால் உங்களுடைய எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM