இரத்த சர்க்கரையின் அளவு இயல்பான அளவை விட கூடுதலாக இருந்தால் அதற்கான அறிகுறிகளை உடல் வெளிப்படுத்தும். அதிக அளவிலான தாகம், அதிக அளவிலான பசி, பாத பகுதிகளில் எரிச்சல், அரிப்பு என பல விடயங்களை பட்டியலிடலாம்.
இதில் பாத பகுதிகளில் உணர்வின்மை, மதமதப்பு, எரிச்சல் தன்மை, அரிப்பு போன்ற அறிகுறிகள் தோன்றினால் உங்களுக்கு இரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்து, அதனால் பாதங்களில் உள்ள நரம்பியல் மண்டலம் பாதிக்கப்பட்டிருக்கிறது என பொருள் கொள்ள வேண்டும்.
அதனைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும். இதனை அலட்சியப்படுத்தி புறக்கணித்தால், உங்கள் வலது பாதத்தையோ இடது பாதத்தையோ அல்லது பாதங்களில் உள்ள விரல்களையோ சத்திர சிகிச்சையின் மூலம் அகற்ற வேண்டியதிருக்கும்.
உலகளவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் அதேவேளை, நீரிழிவு நோயால் பாதங்களில் எரிச்சல், புண், அரிப்பு போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகம்.
இது தொடர்பாக மருத்துவர்கள் விளக்கம் அளிக்கையில்,
''இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அதனை கடந்து கட்டுப்பாட்டில் இல்லையென்றால், நீரிழிவு நோயால் முதலில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் பாதங்கள் தான்.
எம்முடைய உடலில் தொடர்ச்சியாக நடைபெறும் இரத்த ஓட்டத்தின்போது பாத பகுதியில் இருந்து இரத்த ஓட்டம் அதாவது அசுத்தமான இரத்த ஓட்டம் மீண்டும் இதயத்துக்கு சீரான வேகத்தில் திரும்ப வேண்டும்.
ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு இது சீரான வேகத்தில் நடைபெறுவதில்லை. அவர்களின் கால் பகுதியில் அசுத்த இரத்தங்கள் தேங்குவதால், அதிலும் குறிப்பாக இரத்த நாளங்கள் மற்றும் நரம்பியல் மண்டலங்களில் இவை தேங்குவதால், அங்கு Advanced Glycation End Products எனும் பிரத்தியேக இரசாயன திரவம் உற்பத்தியாகிறது.
இது எம்முடைய பாதத்துக்கான உணர்ச்சிகளை குறைக்கும் பணியில் பங்குபற்றுகிறது. இதனால் நாம் நடந்து செல்லும்போது எம்மையும் அறியாமல் முட்கள், கற்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படும்போது, அதனூடாக நோய் தொற்று ஏற்படுகிறது.
இதன் காரணமாக பாதங்களில் ஆறாத சர்க்கரை நோய்ப்புண் உண்டாகிறது. இதனை மருத்துவர்கள் டயபட்டிக் நியூரோபதி என்றும் வகைப்படுத்துகிறார்கள்.
எனவே, கால் பகுதியில் அல்லது பாத பகுதியில் எரிச்சல் அல்லது அரிப்பு ஏற்படத் தொடங்கினால், அவை டயபட்டிக் நியூரோபதியின் தொடக்க நிலை அறிகுறி என உணர்ந்துகொண்டு அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இதனுடன் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியை நாளாந்தம் உறுதியாக பின்பற்ற வேண்டும்.
மேலும், இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்கள் தங்களது முகத்தை பாதுகாப்பது போல், பாதங்களையும் நாளாந்தம் பிரத்யேக கண்ணாடி மூலம் பார்த்து எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- டொக்டர் நல்லப்பெருமாள்
(தொகுப்பு - அனுஷா)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM