உலக நீர் தினத்தை முன்னிட்டு நீர் வழங்கள் மற்றும் சுகநல பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டத்தினூடாக உலக வங்கியின் கடனுதவியின் ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட கெல்சி தமிழ் வித்தியாலயத்திற்கான குடிநீர் வழங்கல் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று (22) நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் முன்னாள் நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் அவர்களினால் கெல்சி தமிழ் வித்தியாலயத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிகழ்வில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் நுவரெலிய பிராந்திய இயக்குநர் அவர்களும் நிதியத்தின் பொறியியலாளர்கள் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள், ஓஸிப் நிறுவனர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM