லொத்தரில் 11 கோடி ரூபாவை வென்ற பின் மற்றொருவரை மனைவி திருமணம் செய்ததாக கணவன் வழக்கு: தாய்லாந்தில் சம்பவம்

Published By: Sethu

22 Mar, 2023 | 04:12 PM
image

லொத்தரில் 12 மில்லியன் பாத் (சுமார் 11.27 கோடி இலங்கை ரூபா, 2.9 கோடி இந்திய ரூபா) பரிசை வென்ற பின்னர் தனது மனைவி மற்றொருவரை திருமணம் செய்ததாக கூறும் தாய்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர், மனைவிக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார்.

நரீன் எனும் இந்நபரும் மேற்படி பெண்ணும் 20 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்தனர். இவர்களுக்கு 3 பிள்ளைகளும் உள்ளனர். 

2 மில்லியன் பாத் கடன் இருந்தால், கடனை அடைப்பதற்காக இவர்கள்  2014 ஆம் ஆண்டு தென் கொரியாவுக்குச் சென்றனர். பின்னர் பிள்ளைகளைப் பராமரிப்பதற்காக அப்பெண் தாய்லாந்துக்கு திரும்பி வந்தார். நரீன் தொடர்ந்தும் தென் கொரியாவில் பணியாற்றி மாதாந்தம் 27,000 முதல் 30,000 பாத் பணத்தை அனுப்பி வைத்தாராம்.

பின்னர், தனது மனைவி லொத்தரில் 12 மில்லியன் பாத் பணத்தை வென்றதையும் அதை தன்னிடமிருந்து மறைத்ததையும் நரீன் கண்டுபிடித்தார்.

கடந்த 3 ஆம் திகதி அவர் தாய்லாந்துக்கு திரும்புவதற்கு அவர் தீர்மானித்தார். எனினும் தொலைபேசி அழைப்;புகளுக்கு அவரின் மனைவி பதிலளிக்கவில்லை. 

தனது மனைவி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பெப்ரவரி 25 ஆம்  திகதி திருமணம் செய்துள்ளதை தாய்லாந்தை வந்தடைந்த பின்னர் நரீன் கண்டுபிடித்தார்.

இது எனக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. 20 வருடங்களாக என்னுடன் வாழ்ந்த மனைவி இப்படி செய்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொரு மாதமும் அவருக்குப் பணம் அனுப்பியதால் எனது வங்கிக்கணக்கில் 60,000 பாத் மாத்திரமே எஞ்சியுள்ளது. எனக்கு நீதி வேண்டும்' என நரீன் கூறியுள்ளார்.

எனினும்,  லொத்தரில் பரிசு வெல்வதற்கு பல வருடங்களுக்கு முன்னரே நரீனை தான் பிரிந்துவிட்டதாகவும், தனது காதலனை தான் திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் அப்பெண் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கியூபாவில் நடனமாடி இணையத்தைக் கலக்கும் 70...

2026-08-28 12:57:11
news-image

360 தொன் எடையுள்ள பிரம்மாண்டக் கோட்டையை...

2026-08-26 16:27:14
news-image

உசைன் போல்ட்டை மிஞ்சிய சீனாவின் மனித...

2026-08-24 11:24:33
news-image

தனது 117ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய உலகின்...

2026-08-24 12:20:32
news-image

2,000 ட்ரோன்கள்... ஒரு காதல் கதை!...

2026-08-22 15:48:35
news-image

ஐரோப்பாவில் மிக உயரமான மேரி மாதா...

2026-08-20 12:15:47
news-image

அழிவின் விளிம்பில் உள்ள கழுகுகளைப் பாதுகாக்கும்...

2026-08-14 09:55:23
news-image

விக்ரமுடன் இருந்த லார் கிப்பன் எங்கிருந்து...

2026-08-14 09:17:37
news-image

உக்ரேன் பெண்ணின் சாதனையை முறியடித்த இந்திய...

2026-08-11 11:58:56
news-image

2026 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த...

2026-08-11 10:05:57
news-image

அதிக விலைக்கு விற்கப்பட்டது 6.7 கோடி...

2026-07-15 10:55:54
news-image

சுவிஸ் தூதுவருடன் அமைச்சர் பிமல் சந்திப்பு

2026-07-12 11:08:01