சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நேர்மறை கண்ணோட்டத்தில் நோக்குங்கள் - ஆதரவு வழங்குமாறு சகல தரப்பினரிடமும் இலங்கை வர்த்தகப்பேரவை வேண்டுகோள்

Published By: Digital Desk 5

22 Mar, 2023 | 05:18 PM
image

(நா.தனுஜா)

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை நேர்மறையான கோணத்தில் நோக்குமாறும், மறுசீரமைப்புச்செயன்முறைக்கு அவசியமான ஆதரவை வழங்குமாறும் பொதுமக்கள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரிடமும் இலங்கை வர்த்தகப்பேரவை வேண்டுகோள்விடுத்துள்ளது.

அதுமாத்திரமன்றி சர்வதேச நாணய நிதியத்தினால் நிபந்தனைகளாக முன்வைக்கப்பட்டிருக்கும் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு முன்னுரிமையளிக்குமாறு அப்பேரவை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

'நாட்டின் பொருளாதாரம் தற்போது மிகமுக்கியமானதொரு நிலையில் இருக்கின்றது.  எனவே நீண்டகாலமாக நிலுவையிலிருந்த பொருளாதார மறுசீரமைப்புக்களை இப்போது  மேற்கொள்வதென்பது நிலையான பொருளாதார மீட்சியை அடைந்துகொள்வதற்கு இன்றியமையாததாகும்' என்றும் இலங்கை வர்த்தகப்பேரவை நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை வரியறவீடு, அரசுக்குச்சொந்தமான நிறுவனங்கள், வர்த்தக நடைமுறை, தொழிலாளர் மற்றும் காணி சட்டமறுசீரமைப்பு உள்ளிட்ட முக்கிய மறுசீரமைப்புக்களில் விசேட கவனம் செலுத்தப்படவேண்டுமெனத் தெரிவித்துள்ள வர்த்தகப்பேரவை, நாடு நிலையான பொருளாதார வளர்ச்சிப்பாதையில் பயணிப்பதற்கு இந்நடவடிக்கை அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

'அதேபோன்று நிதிசார் இலக்குகளை அடைந்துகொள்வதற்கு சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மற்றும் கடன்மறுசீரமைப்புச்செயன்முறை ஆகியவற்றின் மையப்புள்ளியாக இருக்கக்கூடிய முக்கிய மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் முன்னுரிமையளிக்க வேண்டும். 

அரச வருமானத்தைப் பொறுத்தமட்டில் ஒட்டுமொத்த உற்பத்தித்திறன் முன்னேற்றத்தைக் கவனத்திற்கொள்வதுடன் அரசாங்க செலவினங்களை இயலுமானவரையில் குறைத்துக்கொள்ளவேண்டும். நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன்கூடிய தரவுகளையும், சான்றாதாரங்களையும் அடிப்படையாகக்கொண்ட கொள்கைவகுப்பின் மூலம் அதனை அடைந்துகொள்ளமுடியும்' என்று இலங்கை வர்த்தகப்பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டம் இடைநிறுத்தப்படும்பட்சத்தில் அதனை இலங்கையால் தாங்கிக்கொள்ளமுடியாது என்றும், மீண்டும் 18 ஆவது உதவிச்செயற்திட்டத்தை நாடமுடியாது என்றும் வர்த்தகப்பேரவை எச்சரித்துள்ளது. 

எனவே தற்போதைய மறுசீரமைப்புச்செயன்முறைக்கு அனைத்துத்தரப்பினரும் ஆதரவளிக்கவேண்டும் என்றும், அதன்மூலமாகவே பொதுமக்களுக்கான ஸ்திரமான பொருளாதாரத்துடன்கூடிய சுபீட்சப்பாதையில் நாடு பயணிக்கும் என்றும் அப்பேரவை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51