கௌதம் கார்த்திக் நடிக்கும் 'ஓகஸ்ட் 16 1947' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Ponmalar

22 Mar, 2023 | 04:03 PM
image

நடிகர் கௌதம் கார்த்திக் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஓகஸ்ட் 16 1947' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.  அதனை நடிகர்  கார்த்தி மற்றும் இசையமைப்பாளர் அனிரூத் ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள். 

அறிமுக இயக்குநர் என். எஸ். பொன் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'ஓகஸ்ட் 16 1947'. இந்த திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, நடிகை ரேவதி சர்மா அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இவர்களுடன் புகழ், ரிச்சர்ட் அஸ்தோன், ஜேசன் ஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். கே. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

இந்திய சுதந்திர போராட்டக் காலகட்டத்திய திரைப்படமான இதனை ஏ ஆர் முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ஆர். முருகதாஸ் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் ட்ராக் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. ஏப்ரல் ஏழாம் திகதியன்று வெளியாகவிருக்கும் இந்த படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

முன்னோட்டத்தில் செங்காடு எனும் கிராம மக்கள் சுதந்திர காலக்கட்டத்தில் அடிமையாக இருக்கும் சூழல், கௌதம் கார்த்திக்கின் காதல் அடிமைக்கு எதிரான குரல் போன்ற உணர்வுபூர்வமான காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'எறும்பு' திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு

2023-06-01 17:02:25
news-image

'டக்கர்' அதிவேகமான திரைக்கதை - நடிகர்...

2023-06-01 14:05:31
news-image

இளைய தலைமுறையினரைக் கவருமா சித்தார்த்தின் ‘டக்கர்’..?

2023-06-01 12:03:24
news-image

சுனைனா நடிக்கும் 'ரெஜினா' பட டீசர்...

2023-06-01 11:31:49
news-image

ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட ‘போர் தொழில்’படத்தின் முன்னோட்டம்

2023-05-31 14:32:35
news-image

நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கும் 'பெல்'

2023-05-31 10:47:00
news-image

நடிகை அஞ்சலி நடிக்கும் 'ஈகை' பட...

2023-05-30 12:43:42
news-image

‘எல். ஜி. எம்' படத்தின் செகண்ட்...

2023-05-30 12:37:36
news-image

'வீரன்' படத்தில் நடித்ததை விட கற்றது...

2023-05-30 12:37:09
news-image

அஜித் குமாருக்கு ஜோடியாகிறாரா திரிஷா...!?

2023-05-30 12:34:40
news-image

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகு தாத்தா'...

2023-05-27 15:08:11
news-image

டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் 'ப்பூ'

2023-05-27 15:26:51