ஐம்பதாவது முறையாக இலங்கைக்கு உல்லாசப் பயணம் மேற்கொண்டு வந்த 72 வயதுடைய ஒருவருக்கு இலங்கை சார்பில் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

சாண்டர் ஜேஸன் (72) என்பவர் டென்மார்க்கைச் சேர்ந்தவர். இவர் 1974ஆம் ஆண்டு முதன்முறையாக இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு வந்திருந்தார்.

அதன் பின்னர் 1977ஆம் ஆண்டு முதல், ஆண்டு தோறும் ஒரு முறை அல்லது இரண்டு முறை வருவதை வழக்கமாக்கிக்கொண்டார்.

தற்போது ஓய்வு பெற்ற கணக்காளரான ஜேசன், இலங்கையின் சுற்றுலாத் தலங்கள் தன்னை வெகுவாகக் கவர்ந்திருப்பதாகவும், அவற்றை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை என்பதனாலேயே மீண்டும் மீண்டும் இலங்கை வந்து செல்வதாகவும் கூறினார்.