நடிகர் சந்தோஷ் சரவணன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'இது கதையல்ல நிஜம்' எனும் திரைப்படம் ஏப்ரல் மாதம் ஏழாம் திகதியன்று வெளியாகிறது.
இந்தப் படம் வெற்றி பெற தமிழ் திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பாளரான கலைப்புலி எஸ். தாணு சமூக வலைதள பக்கத்தில் பிரத்யேக வாழ்த்தினை பதிவு செய்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் கண்ணன் ராஜமாணிக்கம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'இது கதையல்ல நிஜம்'. இதில் தயாரிப்பாளரும், நடிகருமான சந்தோஷ் சரவணன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சுனு லட்சுமி நடித்திருக்கிறார். எம். ஏ. ராஜதுரை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைத்திருக்கிறார். உண்மை சம்பவத்தை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கலா தியேட்டர்ஸ் எனும் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஏசியாசின் மீடியா எனும் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.
சிறிய முதலீட்டில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் உண்மை சம்பவங்களை மையப்படுத்தி தயாராகி இருப்பதாலும், மண் மணம் கமழும் படைப்பாக உருவாகி இருப்பதாலும் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM