பொலிவுட் நட்சத்திர நடிகர் அக்ஷய் குமாரின் நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத புதிய படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழில் சூர்யா நடித்து டிஜிட்டல் தளத்தில் வெளியான திரைப்படம் 'சூரரைப் போற்று'. இந்த திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா, 'சூரரைப் போற்று', ஹிந்தியில் மறு உருவாக்கம் செய்து இயக்கியிருக்கிறார்.
ஹிந்தியில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தில் பொலிவுட்டின் நட்சத்திர நடிகர் அக்ஷய் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.
இவருடன் நடிகை ராதிகா மதன், பரேஷ் ரவால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
இந்திய விமானப் படையில் பணியாற்றிய அதிகாரி கப்டன் கோபிநாத்தின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அபுடாண்டியா எண்டர்டெய்ன்மென்ட், கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸ் மற்றும் 2 டி எண்டர்டெய்ன்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அருணா பாட்டியா, ஜோதிகா, சூர்யா, விக்ரம் மல்ஹோத்ரா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் 'புரொடக்சன் 27' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த இந்தி திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகிறது.
இதனிடையே ஹிந்தி திரையுலகில் அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான 'பச்சன் பாண்டே', 'சாம்ராட் பிருத்விராஜ்', 'ரக்ஷா பந்தன்', 'குட்புட்லி', 'ராம் சேது' ஆகிய அனைத்து படங்களும் வணிக ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான 'செல்ஃபி' திரைப்படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. இதனால் அக்ஷய் குமாரின் சந்தை மதிப்பு சரிந்து வருகிறது என ஹிந்தி திரையுலக வணிகர்கள் வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்கள். இந்நிலையில் அக்ஷய் குமாரின் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'சூரரைப் போற்று' படத்தில் ஹிந்தி ரீமேக், அவரை காப்பாற்றுமா..! என்று திரையுலக வணிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நடிகர் சூர்யாவின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய 'சூரரைப் போற்று', அக்ஷய் குமார் வாழ்விலும் திருப்புமுனையை ஏற்படுத்துமா..? என அவருடைய ரசிகர்கள் கவலையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM